இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 .00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.
யாழ். மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஹான் டயல்ஸ்சின் ஏற்பாட்டில் இடம் பெற்று வரும் இச் செயலமர்வில் இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழி ஊடக பொறுப்பதிகாரி கமல்லியனராட்சி மற்றும் இவ் ஆணைக்குழுவின் தமிழ் மொழி ஊடக பொறுப்பதிகாரி எம். எஸ் அமீர் உசைன் ஆகியோரினால் ஊடகம் தொடர்பிலான விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த செயலமர்வில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் முக்கியத்துவம், அவ்வாறு வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பிலும் அவற்றில் ஏதாவது பிழையான செய்திகள் வெளியாகியிருப்பின் அது தொடர்பில் ஊடகங்களுடனான அணுகுமுறை மற்றும் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிசாருக்கு விளக்கமளிக்கப்பட்டது

Post a Comment