முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம் -M.ஷாமில் முஹம்மட்




M.ஷாமில் முஹம்மட்


இந்த முஸ்லிம் தேசம் இலங்கை போன்று 27 மடங்கு பெரியது காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிரமிப்பு பிரச்னையைப் போலவே சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு அரச ஒடுக்குமுறை பிரச்சனைகள் உண்டு என்பதும் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் சீனாவில் சிங்கியாங் முஸ்லிம் தேசத்தை வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்
சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம் பிரதேசம்தான் முஸ்லிம் உலகிலும் அதிகமாக அறியப்படாத முஸ்லிம் தேசம் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது பாகிஸ்தானிலிருந்து 523 கி.மீ.தூரத்திலும் இந்தியாவிலிருந்து 3,380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் 6/1 ஆறில் ஒரு பங்கு விரிவாக
இது இலங்கை போன்று 27 மடங்கு பெரியது இலங்கை 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது ஆனால் சிங்கியாங் 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுகொண்டது இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி ஆனால் அங்கு முஸ்லிம்கள் பேசமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது.
இதை இன்னொரு முறையில் விளங்குவது என்றால் 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இலங்கையின் அதிலும் 15,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள வடக்கு  அதில் தமிழர் பிரச்சினை பெற்ற உலக கவனத்தை கூட இலங்கை போன்று 27 மடங்கு பாரிய சிங்கியாங் பெறவில்லை என்பதுதான்.
காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும் அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் பக்கம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் ஆக்கிறமிப்பில் உள்ளது 1,41,000 ச.கி.மீ. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்திய என்ற ஜனநாயக மேலாதிக்கம் கஷ்மீரை ஆக்கிரமித்து அடக்கிவைதுள்ளது போன்று சீனா என்ற கம்யூனிஸ மேலாதிக்கம் சிங்கியாங் தேசத்தை ஆக்கிரமித்து நிற்கின்றது இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் சுமார் 1,45,000 ச.கி.மீ. பரப்பளவை கொண்டது சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல பல மடங்கு பெரிது ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை காரணம் சீனா அரசு திட்டமிட்டு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுதான்.
காஷ்மீர் உலகின் அரைகுறை கவனத்தை பெற்றிருப்பது போன்று கூட சீனா சிங்கியாங் பிரச்சினை அறியப்படவில்லை அங்கு அடக்கு முறை செய்திகளை உலகம் அறியமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுடன் முஸ்லிம் அமைப்புக்களும் இயக்கங்களும் இது பற்றிய போதுமான தகவல் இன்றி இருப்பதும் ஒரு முக்கியகாரணமாகும்.
1949இல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின் மீது படையெடுத்து அதனை சீனா ஆக்கிரமித்து தன் எல்லைகளை அகட்டி கொண்டது. 1948இல் பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து எல்லைகளை அகட்டி கொண்டது போன்றுதான் இதுவும் இரண்டு ஆக்கிரமிப்புகும் வயது கிட்ட தட்ட ஒன்றுதான் ஆனால் சீனா சிங்கியாங் ஆக்கிரமிப்பின் அழு குரல் வெளியே கேற்காதபடி சிங்கியாங் முஸ்லிம்களை மிக மோசமாக அடக்கி வைத்திருக்கிறது.
சீனா எவ்வாறு சிங்கியாங் தேசத்தை தன்னுடன் பலவந்தமாக இணைத்து கொண்டது என்பதை கவனித்தால், சிங்கியாங் பிரதேசம் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்டதாக காணப்பட்டது பின்னர் சீனா சீனர்களை திட்டமிட்டு குடியேற்றியது பல நுறு குடியேற்றங்களை உருவாக்கி முஸ்லிம்களை தங்களின் சொந்த மண்னில் அதிகாரமற்ற பொம்மைகளாக்கியது பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை அங்கு குடியமர்த்தியது அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட சிவில் கிராமங்களாக உருவெடுத்தது இப்போது 2 கோடி மக்கள்தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் தான் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் எனும் சீனர்கள் 1949இல் ஹன் சீனர்கள் தொகை வெறும் 6 சதவீதமாகத்தான் காணப்பட்டது . திட்டமிட்ட குடியேற்றம் அறுபது ஆண்டுகளில் சீனர்களை 7 மடங்கு அதிகரித்திருக்கிறது.
மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பலம் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது மக்கள் தொகையில் மாறிய மாறுதல்களை செய்துள்ளமை இயல்பாக முஸ்லிகள் பலவீனமான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் சீனா தனது இராணுவத்தை இயந்திரத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு அனுப்பவில்லை. மாறாக சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. முஸ்லிம்களின் கையில் இருந்த நகரங்களும் கிராமங்களும் சிறிது சிறிதாக விலைக்கு வாங்கப்பட்டது அவர்களின் பொது நிலங்கள் சீனாவின் அரச சொத்தானது அவை வெளியூர் சீனா மக்களுக்கு வழங்கப்பட்டது ஹன் சீனர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது.இப்போதைய 41 சதவீதம் சீனர்களின் தொகையானது அங்குள்ள ஆக்கிரமிப்பு இராணுவ சிப்பாய்களோ , அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.
சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008இல் 60 பில்லியன் டாலராக காணப்படுகிறது . அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள். சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.
உய்கர் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது வெருப்புடன் நாட்களை கழிக்கின்றனர் . ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் உலக உய்கர் காங்கிரஸ் என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.
சிங்கியாங் பகுதியில் முஸ்லிம்கள் தொடராக எழுச்சி பெருகின்றனர் ஆனாலும் உய்கர்கள் வேரு நாடுகளில் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை. ஆனாலும், இஸ்லாமிய எழுச்சி வளர்ந்து வருகிறது .
ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ஹன் சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியிலும் முஸ்லிம்கள் 90 சதவீதம் இருந்தனர் பின்னர் சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது இந்த திட்டமிட்ட குடியேற்றதின் பின்னர் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீனர்கள் மயமாக்கப்பட்டுள்ளது . இக்கலவரத்தை சீனா தனது இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது . இதன் போது ஒரு இரவில் மட்டும் -10000- பத்தாயிரம் முஸ்லிமகள் காணாமல் போயுள்ளனர் .
சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது. சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து ஹிஜாப் அணிய தடை விதித்தது முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது ஒவ்வொரு நேன்பு மாதத்திலும் இந்த அடக்குமுறைகள் அதிகரிக்கின்றது . அப்படி இருந்தும் முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத விடையமாகவே இருக்கிறது
சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீனர்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து முஸ்லிம்களின் பெரும்பான்மையை சிறுபான்மையாக மாற்றியமைத்தது. சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சினர்கள் மூலம் நிரப்பப்பட்டது . மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலை என்ற முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்கள் தொடர்ந்தும் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்கி ஒடுக்குகின்றனர் ஆனால் அன்மையில் ஜெர்மனியில் ஹிஜாப் அணிந்ததற்காக கொடுரமான முறையில் கொல்லபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் வீர பிரதாபம் பெற்ற முஸ்லிம் உலகின் கவனத்தை, மிக பிரமாண்டமான விடையம் பெறாமல் இருப்பது உறக்கத்தை கலைக்கிறது.
குறிப்பு:
சீனாவின் எல்லை நாடுகள்: ஆப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ. இதில் 4 முஸ்லிம் நாடுகள் அமைந்திருக்கின்றன என்பது குறிபிட்ட தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger