அரச செயற்பாடுகள் தந்த அதிருப்தியில் நான் இரு தடவைகள் அரசிலிருந்து ஓரமானவன்.எனது சக்தியைப் பிரயோகிக்க வேண்டிய இடத்தில் அதை நான் பிரயோகித்திருக்கிறேன்.பிரச்சினைகளுக்குத் தீர்வு அரசிலிருந்து விலகுவதுதான் என்றால் நான் அதற்கும் தயார் என நீதியமைச்சரும் ஶ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்று (24) வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கும் ஹக்கீம்,
அளுத்கம,பேருவளை வன்முறையின்போது பொறுப்புக் கூற வேண்டிய அரசு அதைக் கைவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறது.தாக்குதல் நடத்தியவர்கள் அரச சீருடைகளிலும் இருந்திருக்கிறார்கள்.இதன் சகல அடிப்படை ரகசியங்களையும் நாம் அறிவோம்.வெளியிடுவதற்கும் தயங்க மாட்டோம்.
நீதியை சரியாக நிலை நாட்டுங்கள்.எதையும் ஒளித்து மறைக்க வேண்டாம் என்றே நாம் அரசைக் கேட்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment