பாகிஸ்தானின் கராச்சி விமானம் நிலையம் மீது தாக்குதல் நடத்தி, பயணிகள் விமானத்தினை கடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கான நகர்விற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, ஆயுதங்கள் அடங்கிய குழு ஈடுபடுத்தப்பட்டதாக தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானங்களை கடத்தி, தளங்களுக்கு சேதம் ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமென தலிபான்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் தமது பலத்தினை நிரூபிப்பதற்கு ஒரு முன்னுதாரணம் எனவும், பாகிஸ்தானில் தொடர்ச்சியாக பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளார்.
மோசமான தாக்குதல்களுக்கு தயாராகுமாறும் தலிபான்கள், பாகிஸ்தான் அரசாங்கத்தினை எச்சரித்துள்ளனர்.
ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற பரஸ்பர தாக்குதலில் 10 கிளர்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக. 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய ஊழியர்களின் பாதுகாவலர்களின் சீருடைகளுடன், இரண்டு சிறியரக வேன்களில் விமான நிலையத்திற்குள் நுழைந்த குழுவினர் நேற்று நள்ளிரவு தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
ஜின்னா விமான நிலையத்தில் சரக்கு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தரித்திருந்த பகுதியின் ஊடாகவே அவர்கள் உட்பிரவேசித்துள்ளனர்.
அதன்பின்னர், இரண்டு குழுக்களாக பிரிந்த கிளர்ச்சியாளர்கள் வௌ;வேறு திசைகளில் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாகிஸ்தான் விமான நிலையம் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment