இருபதாவது, உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்; 12 ம்திகதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் திகதி வரை பிரேசிலில் நடக்கின்றன. போட் டித்தொடர் முடிவடைந்ததும் பல பிரி வுகளின் கீழ் வீரர்களுக்கும், நிர்வா கிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். உலக கிண்ணத்தின்; வீச்சை வைத்து அதற்கான பரிசு தொகையும் மிகவும் அதிகமாகவே உள்ளது. அதுகுறித்த ஒரு சிறப்பு பார்வை.
அடக்க ஒடுக்கமான அணி விளை யாட்டு கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றி அடக்க ஒடுக்கமாக விளை யாடும் அணிக்கு பெயார் பிளே என்ற விருது அளிக்கப்படும். விருது டன் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப் புள்ள கால்பந்தாட்ட உபகர ணங்கள் வழங்கப்படும். தங்க காலணி விருது அதிக கோல் அடிக்கும் வீரருக்கு கிடைக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே எண்ணிக்கையில் கோல் அடித் திருந்தால், அந்த வீரர்கள் கோல் அடிக்கும் போது எத்தனை உதவி களை பெற்றனர் என்பது கணக்கில் கொள்ளப்படும். குறைவான உதவியு டன் கோல் அடித்த வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் இருந்தால், அப்போது மொத்த நிமிடங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு குறைந்த நேரத்தில் அதிக கோல் அடித்த வீரருக்கு தங்க காலணி விருது கிடைக்கும்.
அதிக கோல் அடித்து இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு வெள்ளி காலணியும், மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு வெண்கல காலணியும் வழங்கப்படும். ரசிகர்கள் எந்த வீரருக்கு அதிக ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்களுக்கு, தங்க பந்து விருது அளிக்கப்படும்.
இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு வெள்ளி பந்தும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு வெண்கல பந்தும் அளிக்கப்படும். சிறந்த கீப்பருக்கு தங்க கையுறை. கால்பந்தாட்டத்தில் முக்கிய புள்ளி கோல்கீப்பர் தான். அவரை மையமாக கொண்டே ஆட்டம் நகரும். சிறந்த கோல் கீப்பருக்கு தங்க கையுறை விருது அளித்து கௌரவிக்கப்படும்.
இளம் சிங்கம் யாரு? சிறந்த இளம் வீரருக்கான விருது, புதுமுக வீர ருக்கு கிடைக்கும். சிறந்த இளம் வீரரை கால்பந்தாட்ட சம்மேளன தொழில்நுட்ப ஆய்வு குழு தேர்வு செய்யும். இது தவிர கிண்ணத்தை வெல்லும் அணிக்கும் பரிசு தொகை காத்திருக்கிறது.
கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.200 கோடிக் கும் மேல். 2010ம் ஆண்டு உலக கிண்ணத்தின் போது அளிக்கப்பட்ட பரிசு தொகையைவிட இது 17 சத வீத உயர்வாகும்.
2ம் இடம் பிடிக் கும் அணிக்கு 25 மில்லியன் அமெ ரிக்க டொலரும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணி 22 மில்லியன் அமெரிக்க டொலரும் பரிசு தொகை யாக பெறும். காலிறுதிக்கு வரும் அணிகளுக்கு 14 மில்லியன் அமெ ரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் 32 அணி களுக்கும் தலா 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகை யாக கிடைக்கும்.
Post a Comment