JUNE 3RD, 2014
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லா வேவு விமானம் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸார் வசமுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது எந்த நாட்டினது வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இது இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதென்ற தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தும்போது குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. தயாரிப்பு வகைகள் அடிப்படையில் இது சீன நாட்டினதாக இருக்கலாமென மற்றொரு தகவல் கூறுகின்றது.
குறித்த விமானம் சிறியது எனவும் அதில் சிறிய புகைப்படம் எடுக்கும் கருவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றது.
இந்த விமானத்தினால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment