முஸ்லிம் பிரதேசங்கள் தனி ராஜ்ஜியங்கள் - வன்முறைக்கு ஒரு காரணம்

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசத்திலுள்ளவர்கள் நாட்டின் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் மட்டும்தான் வாழ்வது என்ற நினைப்பு என சிங்கள வாராந்த பத்திரிகையொன்று இன்று வெளியிட்டுள்ள விசேட கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அளுத்கம தீயின் யதார்த்த நிலை எனும் தலைப்பில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தீவிரமாக இருப்பினும் சிந்திக்கப்பட வேண்டியவை என்பதனால் பகிர்ந்துகொள்கின்றோம்.
அளுத்கம சம்பவம் தற்பொழுது பழையது. இருப்பினும் அந்த சம்பவத்தில் புதிய பாடமொன்று இருக்கிறது. 1915 ஆம் ஆண்டில் நாட்டில் நடைபெற்ற மரக்கல கலவரத்தின் 99 ஆவது வருட நிறைவு நிகழ்வை கொண்டாடும் ஒரு நடவடிக்கையா? என்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை இந்த நாட்டு மக்களின் மனங்களில் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
காலி வீதியில் பயணிக்கும் சாதாரண ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் இருக்கும் ஒரு பதிவுதான், அளுத்கம மற்றும் பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மிகவும் கவனமாக பாதையில் பயணிக்க வேண்டும் என்பது. பலப்பிட்டியில் உள்ளவர்களின் சண்டித்தனமும், அளுத்கமயில் உள்ள முஸ்லிம்களின் முரண்டுத்தனமும் தான் இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
இது அளுத்கமயில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் வாழும் சகல பகுதியிலும் உள்ள ஒரு வித்தியாசமான சுபாவம். கிழக்கு மாகாணத்தில் சில கிராமங்கள், நகரங்கள் குட்டி அரபு நாட்டைப் போன்றுள்ளது. அறிவித்தல் பலகைகளிலும் கூட அரபு எழுத்துக்கள் தான் உள்ளன. அங்கு வளர்க்கப்பட்டுள்ள மரங்களும் ஈச்சம் மரங்கள். அந்தப் பிரதேசங்களில் நாட்டிலுள்ள சாதாரண சட்டங்கள் நடைமுறையில் இல்லை.
காலி வீதியில் முஸ்லிம் மக்கள் கூடிவாழும் களுத்துறை, கட்டுகுருந்த, அளுத்கம, தர்கா நகர், காலி கித்தங்க ஆகிய பிரதேசங்களில் இலங்கையரல்லாதவர்கள் போன்ற ஒரு குழு காணப்படுகின்றது. இந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் இளைஞர்கள் ”ஹெல்மட்” அணியாமலேதான் மோட்டார் சைக்கிளில் பயணிப்பார்கள். இது அவர்களுக்குரிய அடையாளம். இதற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பேருவளை, அளுத்கம பிரதேசங்களிலும், இந்த ஊர்களின் காலி வீதிக்கு அண்மையிலுள்ள பகுதிகளிலும் தலைக்கனமுள்ள முஸ்லிம்கள் இளைஞர்கள் இருப்பதெல்லாம் பாதையோரங்களிலேயாகும்.
வேறு பிரதேசத்திலுள்ள ஒருவர் வாகனத்தில் செல்லும்போது “ஹோன்“ அடித்தால் போதும் உடனே முறைத்துப் பார்த்து சண்டித்தனம் செய்வார்கள். இந்தப் பிரதேசத்திலுள்ள சில முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்பிரதேசங்களில் சிங்களவர்கள் சட்டத்தால் ஆளப்படுகிறார்கள். முஸ்லிம்கள் சுதந்திரமாக அனுபவிக்கிறார்கள். இதற்கு அரசியல் பலத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தில் தற்பொழுது முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதுக்கியுள்ளது. இந்த கருத்தின் அடிப்படையில் நிறுவனமயப்பட்டுள்ளார்கள். இந்த இயக்கத்துக்கு வரும் நிதி, புத்தகங்கள், போதகர்கள் என்போர் பலம்பெற்றுள்ளனர்.
மேற்படி குறிப்பிட்ட சகல அம்சங்களும் இணைந்தே பாரிய வெடிப்பாக அளுத்கமயில் வெடித்துள்ளது எனவும் அந்தக் கட்டுரை தொடர்கின்றது.  (மு)

மேற்படி குறிப்பிட்ட சகல அம்சங்களும் இணைந்தே பாரிய வெடிப்பாக அளுத்கமயில் வெடித்துள்ளது எனவும் அந்தக் கட்டுரை தொடர்கின்றது. 
Share this article :

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger