அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதாக கூக்குரல் இடும் அமைச்சர்கள், தாம் இதிலிருந்து விலகிச் செல்லத் தயார் இல்லை என்பதையே மறைமுகமாகக் கூறுகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அளுத்கம சம்பவத்துக்காக தாம் அரசிலிருந்து விலகப் போவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் பல இடங்களில் கூறிவருகின்றார். ஆனால், அவர் அரசாங்கத்திலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டார்.
அளுத்கம சம்பவத்தின் பின்னர் எதிர்க் கட்சித் தலைவரின் முகத்தில் அதிகம் மலர்ச்சியை அவதானிக்க முடிந்தது. ‘ஜனாதிபதி பொலிவியா சென்றார். பொதுபல அளுத்கம சென்றார்’ என எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்திருந்தார். இவரின் பேச்சைக் கேட்கும் எவருக்கும் சிரிப்புத்தான் வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment