தென்கொரியாவில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மிக மோசமான படகு விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாக நேர்ந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் பிரதமர் சுங் ஹோங் ஒன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அங்கு பிரதமர் பதவி என்பது பெருமைக்குரிய அடையாளமாகவே கருதப்படுகின்றது. மற்றபடி அங்கு அரசாங்கத்தின் முழு செயல்பாடும் அதிபரைச் சுற்றியே உள்ளது. ஆனால் இந்தப் பதவிக்கு மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படுகின்றது.
பிரதமரின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பொறுப்பு அதிபர் பார்க் ஜியுன் ஹை மீது விழுந்தது. இவர் முதலில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான அன் டைய் ஹீயைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் குவித்துள்ள பெரும் சொத்து விமர்சனத்திற்கு உள்ளாகவே, இரண்டாவது முறையாக 65 வயது நிரம்பிய முன்னாள் பத்திரிகையாளரான மூன் சங் கியூக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கொரியா மீது ஜப்பான் நடத்திய காலனித்துவ ஆட்சியை கடவுளின் விருப்பம் என்று இவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை எழுப்புவதாக அமைந்தது. எனவே இவரது தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
கொரிய அதிபரின் பல முக்கியமான அரசியல் நியமனங்கள் பிரச்சினைக்குள்ளான நிலையில் ஏப்ரலில் நடந்த படகு விபத்தும் அவரது புகழைப் பெருமளவு குறைத்தது. இதில் பிரதமர் வேட்பாளர் தேர்வும் தோல்வியில் முடிந்த நிலையில் மற்றொரு புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் மனநிலையில் அதிபர் இல்லை. எனவே பிரதமர் சுங்கின் ராஜினாமா கடிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளர்களுக்கான தேர்வு நேரத்தில் அரசியல் நிர்வாக செயல்பாட்டில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு மக்களிடையேயும் பெரிய பிரிவு தேன்றியுள்ளது. இத்தகைய பிரச்சனைகளை நீண்டகாலம் தள்ளிப்போடமுடியாது. எனவே சுங்கின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படுவதாக அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்பாளர் யூன் டூ ஹியுன் தெரிவித்தார். எனினும் சுங் பதவியில் நீடிக்கும் காலம் தெளிவாகத் தெரியவில்லை என்று செய்திகள் குறிப்பிடுகின்ற
Post a Comment