ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விமானம், கப்பல், பஸ் ஏன்? நடந்து பயணமாவதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் கம்பியினூடாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு அதுவும் ஒரு நிமிடத்தில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
ஸ்பெய்ன் நாட்டிலிருந்து போர்த்துக்கல் நாட்டுக்கு கம்பி மூலம் அதுவும் சுமார் ஒரு நிமிடத்தில் பயணம் செய்ய முடியும். ஸ்பெய்ன் நாட்டின் ஸன்லுகார் டி கார்டியானா நகருக்கும் போர்த்துக்கல்லின் அல்கோட்டின் நகருக்கும் குறுக்காக ஓடும் கார்டியானா ஆறு இரு நாடுகளையும் பிரிக்கின்றது.
இதனைக் கடந்து செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் வேகமாக கடந்து செல்ல ‘லிமிட்டட் ஸீரோ’ எனும் நிறுவனம் குறித்த ஆற்றுக்குக் குறுக்காக சுமார் 800 மீற்றர் கம்பியை இணைத்து புதிய பயண வழியை அறிமுகம் செய்துள்ளது.
இக்கம்பியினூடாக பயணிக்க ஒருவருக்கு தலா 15 யூரோ (சுமார் 2,600 ரூபா) கட்டணம் செலுத்த வேண்டும்.
ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கல்லுக்குமிடையில் நேர இடைவெளியில் ஒரு மணி நேரம் வித்தியாசம் உண்டு. இதனால் ஒரு ஸ்பெய்னிலிருந்து போர்த்துக்கல் சென்றடையும்போது 59 நிமிடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கும்.
Post a Comment