தெற்கு பிலிப்பைன்சில் செயல்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு உயரடுக்கு ராணுவ அமைப்பைக் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு அணியினை நிலைநிறுத்தி உள்ளது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதில் பிலிப்பைன்ஸ் அரசு துருப்புகளுக்கு புரிந்த உதவி வெற்றியடைந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தெற்குப் பகுதியில் செயல்பட்டுவந்த ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் வால்டைர் கஸ்மின் தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை அங்கு செயல்பட்டுவந்த கூட்டு சிறப்பு நடவடிக்கை பணிக்குழு கலைக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசுக்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.
தங்களுடைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றியடைந்ததால் தெற்குப் பகுதியில் இருந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான மாற்றுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் தொடர்பாளர் குர்ட் ஹோயர் குறிப்பிட்டார். எனினும், போராளிகள் மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும்பொருட்டு அங்கு சில அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment