1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த புரட்சியை, ராஜபக்ஷ வம்சத்தை சேர்ந்த ஒருவர் காட்டிக்கொடுத்ததாக ஆங்கிலேயரின் வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரட்சி பற்றிய தகவல்களை மெதமுலன ராஜபக்ஷ வம்ச பரம்பரையை சேர்ந்தவர் என அந்த குறிப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அரும்பொருட் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள (1812-1822) ஜோன் டோயிலி என்பவர் தனது தலைமை அதிகாரிக்கு எழுதிய குறிப்பில் இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
புரட்சையை அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபுக்களான சில அதிகாரம்ங்களின்(பிரதானிகள்) தகவல்களின் அடிப்படையில் புரட்சிக்கு தலைமை தாங்கும் பிக்கு உட்பட நிலமேக்களை கைதுசெய்வோம்.
தகவல்களை வழங்கிய பிரபுக்கள் வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒற்றரான பிரபு ஒருவர் மூலம் புரட்சி பற்றிய சகல தகவல்களையும் நான் பெற்றுள்ளேன். அவர் புரட்சிக்கு குரல் கொடுத்து வந்த எமது முக்கியமான ஒற்றர்.
இந்த ஒற்றர் வேறு யாருமல்ல வணிக சிந்தாமணி மோஹெட்டி தோன் ராஜபக்ஷ என்பவராவார் என கொழும்பு வார இதழ் ஒன்றை மேற்கோள் காட்டி சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ஷ என்ற இவர் மெதமுல ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உறவு முறையானவர் என கலாநிதி அலுத்வெவ செனரத் தேரர் எழுதிய மெதமுலன மாரெக்க என்ற பத்திரிகை விசேட இணைப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்போட்டின் பிரகாரம் ராஜபக்ஷவினர் 1818 புரட்சியின் ஊடாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தப்படுகின்றனர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் தலைமை தாங்கிய தேசிய வீரர்களில் வணிக சிந்தாமணி மோஹெட்டி ராஜபக்ஷவும் ஒருவர்.
ஆங்கிலேயர் இந்த புரட்சியை கொடூரமான முறையில் அடக்கிய பின்னர் உயிர் பாதுகாப்பு தேடி அவர் மெதமுலனவுக்கு சென்றுள்ளார். இவர் ராஜபக்ஷவின் பாரம்பரையை சேர்ந்தவர் என்றே கருதப்படுகிறது.

Post a Comment