உலகின் அதிமுக்கிய தலைவர்கள் 35 பேரின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுகேட்ட ரகசியத்தை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல 'கார்டியன்' நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள எட்வர்ட் ஸ்னோடெனின் ரகசிய குறிப்புகளை மேற்கோள் காட்டியுள்ள அந்த நாளிதழ், உலகின் அதிமுக்கிய 35 அரசியல் தலைவர்களின் சுமார் 200 தொலைபேசி இணைப்புகளை அமெரிக்கா ஒட்டுகேட்ட ரகசியத்தை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
அந்தந்த நாட்டின் அரசு அதிகாரிகளின் உதவியுடன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை, ராணுவ தலைமை மையமான பெண்டகன் மற்றும் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஆகியவற்றின் துணையுடன் மேற்கண்ட தொலை பேசிகள் மூலமாக நடைபெற்ற உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த ஒட்டுகேட்பு வேலை 2006-ம் ஆண்டில் இருந்தே துவங்கி விட்டதாக எட்வர்ட் ஸ்னோடென் வசம் உள்ள அமெரிக்க அரசின் ரகசிய குறிப்பு தெரிவிக்கின்றது.
Post a Comment