அமெரிக்காவில் 1999 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நடுத்தர வயதினரிடையே தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஒரு தசாப்தத்தில் தற்கொலை 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நோய் கட்டுபாடு நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதிற்கும் 64 வயதிற்கும் இடைப்பட்ட வெள்ளையினத்தவர்களுக்கும் அமெரிக்க பிரஜைகளான இந்தியர்களிடையிலும் தற்கொலை அதிகரிப்பு காணப்படுகின்றது.
இந்த அதிரிப்பிற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க நோய் கட்டுபாடு நிலையம் ஆய்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பல்வேறு தற்கொலை தடுப்பு செயறிட்டங்கள் இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவி புரிவதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment