ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் 3 வழிகளில் ஒரே நேரத்தில் சீன ராணுவம் ஊடுருவியிருப்பதை ஆளில்லா வேவு விமானத்தின் புகைப்பட காட்சிகள் உறுதி செய்திருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெளலத் பெக் ஒல்டி அருகே 3 பகுதிகள் வழியாக ஒரே நேரத்தில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் முன்னேறி வந்துள்ளனர்.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள ஆளில்லா உளவு விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு பகுதியில் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது சீன ராணுவம்.. கடந்த ஏப்ரல் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து 5 இடங்களில் கூடாரம் அமைத்தனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக, இருதரப்பு எல்லைப்படை அதிகாரிகள் நிலையில் இதுவரை 3 கொடி அமர்வு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன.ஆனால் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சீன ராணுவம் ஏற்க மறுத்து வருகிறது.
Post a Comment