மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்



Print Friendly
558saloonமேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்-
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில் சிகை அலங்காரம் செய்யும் பெண்கள் காற்சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு மேலாடையின்றி அரை நிர்வாணமாக பணி புணிகின்றனர்.
இதனால் அந்த சிகை அலங்காரம் செய்யும் கடையில் ஆண்கள் கூட்டம் அலை மோதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், கடந்த பெப்ரவரி மாதம் இந்த கடையை திறந்தோம். புதுமை வேண்டும் என்பதால் இளம்பெண்களுக்கு முடிவெட்டுதல், ஷேவிங், முக அலங்காரம் செய்வதில் கைதேர்ந்தவர்களை பணியமர்த்தினோம்.
ஆரம்பத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பலர் வாரம் இருமுறை வருகை தந்தார்கள். ஆனால் இப்போது இப்போது நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். ஒரு வாடிக்கையாளர் 850 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நிலம் உவர்ப்பினால் மக்கள் இடம்பெயர்வு-
கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சிக்குளம் மற்றும் அதனை அண்மித்த சில கிராமங்களில் நிலம் உவர்ப்படைந்து வருவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, குறித்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாரர்.
கடல்நீர் உட்பிரவேசித்ததால் நிலம் உவர்ப்படைந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் உவர்ப்படைந்து குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குஞ்சிக்குளம் பிரதேசத்தில் முன்னர் 700 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது 10 ஏக்கர் வரை விவசாய நிலப்பரப்பின் அளவு குறைவடைந்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கும் மக்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில், கடல் நீர் நன்நீருடன் கலப்பதைத் தடுக்க அணைகளை அமைப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆய்வொன்றினை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் போராட்டம் நடத்த தீர்மானம்-
அரச வைத்திய அதிகாரிகள் எதிர்வரும் 26ம் திகதி நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.
அரசாங்கத்தின் 6 – 2006 சுற்றறிக்கையின் அடிப்படையில், இரண்டாம் தர வைத்தியர்களை 10 வருடங்களில் முதலாம் தரத்துக்கு உயர்த்தும் நடவடிக்கை இன்னும் அமுலாக்கப்படாமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அரச வைத்தியர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger