ஹூராசான் பகுதியில் இருந்து புறப்படுபவர்கள் அல்லாஹ்வின் படையா? ஷைத்தானின் படையா?


இது யாரையும் குறிப்பிடுவதற்காக அல்ல.
ஹதீஸின் தரத்தை மக்களுக்கு அறியச் செய்வதற்காக மட்டுமே.
8760 - حدثنا عبد الله حدثني أبي حدثنا يحيى بن غيلان وقتيبة بن سعيد قالا حدثنا رشدين بن سعد قال يحيى بن غيلان في حديثه قال حدثني يونس بن يزيد عن بن شهاب عن قبيصة عن أبي هريرة عن رسول الله صلى الله عليه و سلم قال : يخرج من خراسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيلياء
تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف جدا
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஹூராசான் பகுதியில் இருந்து கருப்புக் கொடிகள் கிளம்பும். அது ஈலியாவில் ஊன்றப்படும் வர எதுவும் அதனை தடுக்கமுடியாது.
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (
8760)
இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ரிஸ்தீன் பின் ஸஃத் என்பார் இடம் பெற்றுள்ளார். அவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
ஹூராசான்பகுதியில் இருந்து புறப்படுபவர்கள் தஜ்ஜாலின் கூட்டாளிகளே....
2237 - حدثنا محمد بن بشار و أحمد بن منيع قالا حدثنا روح بن عبادة حدثنا سعيد بن أبي عروبة عن أبي التياح عن المغيرة بن سبيع عن عمرو بن حريث عن ابي بكر الصديق قال : حدثنا رسول الله صلى الله عليه و سلم قال الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان يتبعه أقوام كان وجهوهم المجان المطرقة
قال أبو عيسى وفي الباب عن أبي هريرة و عائشة وهذا حديث حسن غريب وقد رواه عبد الله بن شوذب و غير واحد عن أبي التياح ولا نعرفه إلا من حديث أبي التياح
قال الشيخ الألباني : صحيح
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தஜ்ஜால் கிழக்குப் பகுதியில் உள்ள நாட்டில் இருந்து புறப்படுவான். அதற்கு ஹூராசான்என்று கூறப்படும். அவனை ஒரு கூட்டம் பின்தொடர்ந்து செல்லும். அவர்களின் முகங்கள் தோலால் சுற்றப்பட்ட கேடயம்போன்று (அதாவது முகங்கள் அகலமானதாகவும், கன்னங்கள் புடைத்தும்) இருப்பார்கள்.
நூல் ; திர்மிதி (2237)
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger