சூனியம் வேறு கணவன் மனைவியை பிரிக்கும் கலை வேறு


மாற்றுக் கருத்துள்ளோரின் மொழிபெயர்ப்பு வெளிப்படுத்தும் உண்மை!


2:102 க்கு இரு வகையான விளக்கங்கள் இது வரை கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எமக்கும் ஏனையோருக்குமிடையிலான அடிப்படை வித்தியாசங்கள்
1.          சூனியம் என்பது வேறு! கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது என்பது வேறு.
2.         ஷைதான் என்பது மனித ஷைதானையே குறிக்கும்
3.         மலக்குகளுக்கு இச்சூனிய கலை இறக்கப்படவில்லை.
4.         ஹாரூத் மாரூத் மலக்குகலள்ள.
5.         சூனியத்தினால் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

இவை எமது நிலைப்பாடுகளாகும்.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று எந்த வசனத்தை வைத்து மாற்றுக்கருத்துள்ளவர்கள் வாதிடுகின்றனரோ அவர்களது நடையில் இவ்வசனத்தை மொழியாக்கம் செய்தால் கூட சூனியம் வேறு! கணவன் மனைவியை பிரிப்பது வேறு என்பதும், சூனியத்திற்கு எவ்வித சக்தியும் கிடையாது என்பதும் நிரூபணமாகிவிடும்.

மாற்றுக் கருத்துள்ளவர்களின் நம்பிக்கை பிரகாரம் இவ்வசனத்தை தற்போது மொழிபெயர்ப்பு செய்வோம். இப்போதாவது அதில் சூனியத்திற்கு பாதிப்பு உண்டு என்ற கருத்து வருகிறதா என்பதை பொது மக்களாகிய நீங்கள் நடுநிலையில் நின்று சிந்தியுங்கள்.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا

இது வரையுள்ள வசனங்களின் அர்த்தம்:

சுலைமானுடைய ஆட்சியில் ஷைதான்கள் கற்றுக் கொடுத்தவற்றை அவர்கள் (நபிகளார் காலத்தில் வாழ்ந்த அஹ்லுல் கிதாபுகள்) பின்பற்றினார்கள். மேலும், சுலைமான் நிராகரிக்க வில்லை. என்றாலும் ஷைதான்கள் தான் நிராகரித்தார்கள்.

·         ஷைதான்கள் மக்களுக்கு சில விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
·         மக்களும் அவர்களிடமிருந்து சிலதை கற்றுள்ளார்கள்.
·         அந்த விடயங்கள் குப்ரை ஏற்படுத்தக் கூடியவைகள்.
·         ஆனால், இதற்கும் சுலைமான் நபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

· வஹியை விட்டு விட்டு ஷைதான்கள் கற்றுக்கொடுத்தவற்றை தான் யூர்கள் பின்பற்றினார்கள்.

يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ

இது வரையுள்ள வசனங்களின் அர்த்தம்:

அவர்கள் (ஷைதான்கள்) மக்களுக்கு சூனியத்தினையும், மேலும் பாபிலோனியாவிலுள்ள ஹாரூத் - மாரூத் என்ற அந்த இரு வானவர்கள் மீது அருளப்பட்டதையும் கற்றுக் கொடுத்தார்கள்.

· ஷைதான்கள் மக்களுக்கு கற்றுக் கொடுத்தவைகள் இரண்டு விடயங்களாகும்.

1.       சூனியம்
2. ஹாரூத் - மாரூத் எனும் அவ்விரு வானவர்கள் மீது அருளப்பட்டவைகள்

·  எனவே, சூனியம் என்பது தனிக் கலை. வானவர்களுக்கு அருளப்பட்டது என்பது வேறு கலை. இரண்டும் ஒன்றல்ல.

·         ஆனால் இவ்விரு கலைகளும் குப்ரை ஏற்படுத்தக் கூடியவைகள்.


وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ

இது வரையுள்ள வசனங்களின் அர்த்தம்:

நாங்கள் இருவரும் படிப்பினையாகவே உள்ளோம். ஆதலால் (நம்மிருவர் மீது இறக்கப்பட்டதை கற்று) காபிராகிவிடாதீர்கள்! என்று கூறாமல் அவர்களில் ஒருவரும் (இதனை மக்களுக்கு) கற்றுக் கொடுக்கவில்லை.

·         இந்த இடத்திலிருந்து இறுதி வரைக்கும் அந்த இரு வானவர்கள் குறித்தும், அவர்களுக்கு அருளப்பட்டவை குறித்தும், அவ்விருவரிடமிருந்து மக்கள் கற்றுக் கொண்ட குடும்பத்தை பிரிக்கும் கலை குறித்தும், அதற்கு பாதிப்பு உண்டா என்பது குறித்தும், அது குப்ரா? இல்லையா? என்பது குறித்தும் மட்டுமே பேசப்படுகிறது. சூனியம் குறித்தோ, அதற்கு பாதிப்பு உண்டு குறித்தோ எதுவும் பேசப்படவில்லை.

· இவ்விருவானவர்கள் தங்களுக்கு அருளப்பட்டதை குறித்தே இங்கு எச்சரிக்கிறார்கள். சூனியத்தை குறித்து அல்ல!

· தங்களுக்கு அருளப்பட்டதை கற்று காபிராகிவிடாதீர்கள் என்கிறார்கள். தங்களுக்கு அருளப்பட்டது எது என்றால்? அது சூனியம் அல்ல. கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் ஒன்று தான் என்பதை இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட இரு மலக்குகளுமே இங்கு வாக்குமூலம் தருகிறார்கள்.

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ

இது வரையுள்ள வசனங்களின் அர்த்தம்:

எனினும், அவ்விருவரிடமிருந்தும் அதைக்கொண்டு (அவ்விருவானவர்கள் மீது அருளப்பட்டதைக் கொண்டு) கணவன் மனைவிக்கிடையில் பிரிக்கின்ற ஒன்றை கற்றுக் கொண்டார்கள்.

·     அவ்விருவானவர்கள் அவ்வளவு எச்சரித்த பின்பும் மக்கள் அவ்விருவருக்கு எது அருளப்பட்டதோ அந்தக் கலையைக் கொண்டு கணவன் மனைவியை பிரிக்கும் விவகாரம் ஒன்றை கற்றுக் கொண்டனர்.

·         இங்கு, பிஹி بِهِ யில் வரக்கூடிய ஹிهِ என்ற பிரதிப் பெயர் அவ்விருவர் மீது அருளப்பட்டதை وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ குறிக்குமே தவிர, சூனியத்தை குறிக்கமாட்டாது. காரணம், இங்கு இறைவன் பேசுவதே இரு வானவர்களுக்கு அருளப்பட்டதை குறித்துத் தான். சிஹ்ரைப் பற்றியல்ல.

·         அவ்விருவரிடமிருந்து மக்கள் கற்ற கலையினால் குடும்பத்தை பிரிக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ

இது வரையுள்ள வசனங்களின் அர்த்தம்:

அதைக்கொண்டு (அவ்விருவருக்கும் அருளப்பட்டதைக் கொண்டு) அல்லாஹ் நாடினாலே அன்றி எவருக்கும் (எத்தீங்கும்) அவர்களால் செய்துவிட முடியாது.

·         அவ்விருவானவர்களிடமிருந்து கணவன் மனைவியை பிரிக்கும் கலையை அவர்கள் கற்றபோதிலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
·         அல்லாஹ் நாடினால் பாதிப்புகள் ஏற்படலாம்.
·        
     இதில் வரும் பிஹியும் சூனியத்தை குறிக்காது. وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ தான் குறிக்கும்.

·         அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்பது சூனியத்தை அல்ல! அவ்விரு வானவர்கள் மீது இறக்கப்பட்ட கணவன் மனைவியை பிரிக்கும் கலையையே குறிக்கும்.

وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ

இந்த வசனத்தின் ஆரம்பத்திலேயே وَلَوْ أَنَّهُمْ آمَنُوا  என்று வருவதிலிருந்து ஷைதான்கள் கற்றுக் கொடுத்த 1)சூனியம் 2)இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டவை ஆகிய இரு கலைகளை யாரெல்லாம் கற்பார்களோ அவை அவர்களை இறைநிராகரிப்புக்கு கொண்டு செல்லும். மறுமை பாக்கியத்தை இழக்க வைக்கும் என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து பின்வரும் முடிவுகளை பெறலாம்.

1.          P.து மொழியாக்கம் செய்ததை தவறு என்பவர்கள் வேண்டுமென்றே சூனியம் வேறு மலக்குகளுக்கு அருளப்பட்ட கணவன் மனைவியை பிரிக்கும் கலை வேறு என்பதை மொழியாக்கம் செய்யாது பித்தலாட்டம் புரிந்துள்ளனர்.

2.         சூனியத்திற்கு பாதிப்பு உண்டு என்பதற்கு எந்த வசனத்தை பெரும் ஆதாரமாக காட்ட முனைந்தனரோ அதில் சூனியம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எள்முனையளவு கூட ஆதாரமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

3.         சூனியம்  என்பது பித்தலாட்டம் என்று நாம் சொன்ன போது அப்படியென்றால் ஒருவன் மெஜிக் செய்தால் அது குப்ரா?’ என்று எம்மை பார்த்து கேள்வி கேட்டனர். இப்போது இவர்களது வாதப்படியே நாம் அவர்களைப் பார்த்து கேட்கலாம் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவது குப்ர் என்று வந்துள்ளதால் ஒருவன் பொய்யை சொல்லி, அல்லது கோள் மூட்டி இருவருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் அதுவும் குப்ரா?’

4.         இல்லை! பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்தும் குப்ர் இல்லை. ஆனால் குப்ரானவையும் உண்டு என்பது அவர்களின் பதிலாக அமையுமாயின், ‘இதே போன்று தான் சூனியம் என்பது பித்தலாட்டம். அதற்காக அனைத்து பித்தலாட்டமும் குப்ராக மாட்டாது. குப்ரானவையும் அவற்றில் உண்டுஎன்பதுவே உண்மை.

குறிப்பு:

எதை சரியான மொழிபெயர்ப்பு என்று எதிர் தரப்பினர் வாதிடுகின்றனரோ அவர்களது மொழிபெயர்ப்பு அவர்களுக்கே எதிரானது என்பதை எடுத்துக் காட்டுவதே இதன் நோக்கம். நாம் சூனியத்தை மறுப்பது இந்த மொழி பெயர்ப்பை வைத்து அல்ல என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger