ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலும், சிறிலங்கா நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும், 10ம் நாள் தொடங்கி 27ம் நாள் வரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிப்பார். வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும். அத்துடன் ஆண்டு ஆணையாளரின் அறிக்கை குறித்த விவாதமும் நடக்கவுள்ளது. நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஐ.நா குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை அடுத்து, சிறிலங்கா நிலை குறித்து பேரவையில் விவாதங்கள் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வரும் 11ம் நாள் காலை தொடக்கம் மதியம் வரை நடக்கவுள்ள, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குழு விவாதத்திலும் நவநீதம்பிள்ளை துவக்கி வைப்பாளராகப் பங்கேற்பார். இந்த விவாதத்திலும் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
ஜெனிவா கூட்டத்தொடரில் மீண்டும் ஒலிக்கப் போகும் இலங்கை விவகாரம்..
Related Articles
- பாலஸ்தீனத்தில் நடந்தேறும் இஸ்ரேலிய அராஜகம் - அமைதிகாக்கும் மனித உரிமை அமைப்புகள் (வீடியோ)
- பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: எங்கிருந்து வந்தன இவை?
- காஸாவில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் - இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சர்
- ஈராக் உள்நாட்டு போர்: 2 எண்ணெய் வயல்களை கைப்பற்றியது குர்திஷ் படை
- சுவிஸ் வங்கிகளின் வயிறுகளை நிரப்பும் இந்தியர்களின் கருப்புப் பணம்.. ஒரு “ஜிலீர்” ரிப்போர்ட்!
- இஸ்ரேலில் வந்து விழும் ஹமாஸின் ஏவுகணைகளும் கறுப்பின யூதர்களும் - தெரியாத வரிகள்!!!
Labels:
சர்வதேசம்
Post a Comment