இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை
இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்..
உத்தர பிரதேஷின் தத்ரி பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் நெஞ்சுப்பகுதியில் மாத்திரம் 7 துப்பாக்கி சூட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
37 வயதுடைய விஜய் பண்டித்திற்கு இதற்கு முன்னர் பல தடவைகள் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அது குறித்த பொலிஸார் அசமந்த போக்கிலேயே செயற்பட்டதாகவும் அவரின் உறவினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.ர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து பண்டித்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவம் குறித்து இதுவரை 4 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment