இரசியாவையும் சீனாவையும் பற்றிய விநோதமான தகவல்கள்

JUNE 8TH, 2014


சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு.  சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது.  இரசியாவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரம் அமெரிக்காவில் நடக்கும் கொலைகளின் விகிதாசாரத்திலும் பார்க்க இருமடங்கானது.

அமெரிக்கர்களிலும் பார்க்க இரசியர்கள் இருமடங்கு மது அருந்துகிறார்கள்.  உலகின் மிக மோசமான அணுக்கதிர் வீச்சு இரசியாவின் கரச்சே ஏரியில் இருக்கின்றது. இரசியர்கள் அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிக தேநீர் அருந்துகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொன்ட இரசியாவின் மேற்பரப்பு புளூட்டோ கிரகத்தின் நிலப்பரப்பை ஒத்தது.
சீனர்கள் உணவருந்தும் சுள்ளிகள் (chopsticks) எட்டுக் கோடி சோடிகள் ஆண்டு தோறும் செய்யப்படுகின்றன. உலக நன்னீர் வளத்தின் ஐந்தில் ஒரு பங்கு இரசியாவின் பாய்க்கால் ஏரியில் இருக்கின்றது.
இரசியா அலெஸ்கா பிராந்தியத்தை 1867-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு 7.2 மில்லியன் டொலர்களுக்கு விற்றது. சீனா ஹொங்ஹொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்குக் கொடுத்து பின்னர் மீளப்பெற்றது.
இரசியாவின் எரிவாயு, நீர் போன்றவை விநியோகிக்கும் குழாய்களின் நீளம் (260,000 கிமீ) பூமியின் சுற்றளவிலும் பார்க்க ஆறு மடங்கு நீளமானது.  பூமியின் சுற்றளவிலும் பார்க்க சீனாவின் தொடரூந்துப் பாதைகள் இருமடங்கிலும் மேலானது. பூமியின் சுற்றளவு 40,075கிமீ, சீனத் தொடரூந்துப் பாதை 93,000கிமீ.
உலகின் அதிகமாகப் பதப்படுத்தப் பட்ட யூரேனிய இருப்பில் அரைவாசி இரசியாவினுடையது. இரசியாவின் இருக்கு 694 தொன்கள். அமெரிக்காவின் இருப்பு 604 தொன்கள்.
சீன மக்கள் தொகை 133 கோடிக்கு மேல். இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகின்றது. 2010- ஆண்டு 14.2கோடியாக இருந்த இரசிய மக்கள் தொகை 2050இல் 12.6 ஆக வீழ்ச்சியடையும் என எதிர்பாக்கப்படுகின்றது.
உலக நிலக்கரி உற்பத்தியில் 46 விழுக்காடு சீனாவினுடையது. உலக நிலக்கரிக் கொள்வனவில் சீனாவின் பங்கு 49 விழுக்காடு.
இருபதாம் நூற்றான்டு முழுக்க அமெரிக்கா உற்பத்தி செய்த சீமெந்திலும் பார்க்க அதிக அளவு சீமேந்தை சீனா இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்கின்றது.
சீனாவின் ஆண்டு ஒற்றிற்கு பத்து இலட்சம் பேர் புகைப்பிடித்தலால் இறக்கின்றனர்.
சீனாவின் இயற்கை எரிவாயு இருப்பு 109.3 ட்ரில்லியன் சதுர அடிகள். இரசியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 1,163ட்ரில்லியன்கள். இரசியாவிடம் 87 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் உண்டு. இரசியாவின் 75 ஆண்டுகள் கொள்வனவை அது நிறைவேற்றக் கூடியது.
மொஸ்கோ நகரத் தொடரூந்தில்  நாளொன்றிற்குப் பயணிக்கும் மக்கள் தொகை இலண்டனினதும் நியூயோர்க்கினதும் இணைந்த மொத்தத் தொகையிலும் பார்க்க அதிகமானதாகும்.
சீனர்கள் ஆண்டுக்கு 42.5 பில்லியன் பைகள் திடீர் நூடில்ஸ் உண்கிறார்கள்.
சீனர்கள் ஆண்டு ஒன்றிற்கு உண்ணும் பன்றி இறைச்சியை அடுக்கினால் அது 5,200 ஈஃபில் கோபுரம் அளவு உயரத்திற்குப் போகும். உலகப் பன்றிகளில் அரைப்பங்கு சீனாவில் இருக்கின்றன. சீனாவில் பன்றி இறைச்சி விலை அதிகரிக்காமல் பாதுகாக்க அரசு பன்றி இறைச்சிக் கையிருப்பை வைத்துள்ளது.
திருமணமாகாமல் இறக்கும் ஆண்களின் உடலத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு சீனாவில் உண்டு.  இறந்து போன பெண்களின் உடலிற்கும் ஆணின் உடலிற்கும் திருமணம் செய்யப்படும். இதற்காக பெண்களின் இறந்த உடலைத் திருடி விற்பனை செய்வதும் உண்டு.
அப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை முழுக்க முழுக்கப் போலியாக உருவாக்கி முழுக்க்க முழுக்கப் போலியான அப்பிள் உற்பத்திப் பொருட்களை சீனாவில் விற்பார்கள்.
சீனாவில் உல்லாச பயணிகளுக்கு என ஒரு சட்டம் உண்டு.
சீனாவின் இருபது முன்னணிச் செல்வந்தர்களின் சொத்து ஹங்கேரி நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இணையானது.   இரசியர்களின் முன்னணி செல்வந்தர்களின் மொத்தச் சொத்து பாக்கிஸ்த்தானின் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.
சவுதி அரேபியாவின் மக்கள் தொகையிலும் பார்க்க அதிக அளவு அதாவது மூன்று கோடி மக்கள் சீனாவில் குகைகளில் வாழ்கின்றார்கள்.
சீனாவின் டரங் மாவாட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு எட்டு பில்லியன் சோடி காலுறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சீனச் செல்வந்தர்கள் தம்மைப் போல் உருவம் கொண்டவர்களை தமக்காக சிறைத் தண்டனை அனுபவிக்கச் செய்வார்கள்.
சீன உலக மக்கள் தொகையின் காற்பங்கினருக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்கின்றது.
சீன மக்களின் மொத்தக் கொள்வனவு 2010‍ம் ஆன்டு 2.03 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது இது 2010இல் மூன்று மடங்காக அதிகரித்து 6.18 ட்ரில்லியன்க்களாகும்.
சீனா முழுவதும் ஒரே நேரப் பிராந்தியமாகும். இரசியாவில் ஒன்பது நேரப்பிராந்தியங்கள் இருக்கின்றன.a
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger