JUNE 24TH, 2014
ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைன் ஆட்சி செய்து வந்திருந்தார். இவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவளித்தனர்.
மேலும், சதாமின் பாத் கட்சியும் தடைசெய்யப்பட்டது.

இதன் பின்னர் ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் ஆட்சி உருவானது. ஆனால், தற்போது ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களும் சதாம் கட்சியினரும் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளனர். தற்போது ஈராக்கின் பெரும்பாலான நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில்தான், சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானை கைதுசெய்து அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள்; வெளியாகியுள்ளன.
இத்தகவலை சதாம் ஹுஸைனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தௌரி சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, ஜோர்டான் நாட்டு எம்.பி. ஒருவரும் இத்தகவலை முகப்புத்தகத்தில் உறுப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இத்தகவலை ஈராக் அரசு மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதி குர்து இனத்தைச் சேர்ந்தவராவார்.
Thousands of Iraqi soldiers, men and boys captured by ISIS
Post a Comment