பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ள “ அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம்



 
பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ளஅழிவுக்கான விளிம்பில் ஓர் இனம் (வங்சயக விநாயச அபிமுவ) என்ற சிங்கள மொழியிலான நூலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் இனவாத ரீதியிலானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பல கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றினை மட்டும் கீழே தருகிறேன்.


1. வஹாபிஸத்தை பரப்புவதற்காக முஸ்லிம்கள் அரபுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை நிறுவி வருகின்றனர்.


2.மிகவும் இரகசியமான முறையில் முறையில் சிங்களவர்களின் காணிகள் மற்றும் சொத்துகளை அபகரித்து வருகின்றனர்.


3. நாட்டில் தங்களது சனத்தொகையை அதிகரித்து வருகின்றனர்.


4. வர்த்தகத் துறையும் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது.


5.தங்களது கலாசார உடைகள், உணவுகள் போன்றனவற்றை பிற இனத்தின் மீது பலாத்காரமாக திணிக்க முயல்கின்றனர்.


6. இந்த நாட்டில் 10 சத வீத்த்தைக கொண்ட முஸ்லிம்களுக்கு 6300 பள்ளிவாசல்கள் உள்ளன. 71 சதவீதமான பௌத்தர்களுக்கு 9800 விகாரைகளே காணப்படுகின்றன.


7. 2040 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறும் நிலைமை.


8. வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு சிங்களவர்களின் சொத்துகளை கொள்வனவு செய்கிறார்கள்.


9. நாட்டின் பல இடங்கள் இன்று முஸ்லிமகளின் பொருளாதார மையமாக மாறியுள்ளதுடன், தொழிற்சாலைகள், கைத்தொழிற் பேட்டைகளும் அவர்கள் வசமே உள்ளன.


10. ஒரு முஸ்லிம் துறைமுக அமைச்சராகியதால் அங்கு 12.000 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளது.


11.பதியுதீன் மஹ்மூத் கல்வியமைச்சராகவிருந்த போது வரலாற்றுப் பாடம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த்து.


12. நீதியமைச்சராக ஒரு முஸ்லிம் இருப்பதால் சட்டக் கல்லூரி மாணவர் அனுமதி மிக அதிகளவில் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுகிறது.

நன்றி -.ஆர்பரீல் ,.எச்.சித்தீக் காரியப்பர்-
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger