ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதாக ஜெனீவாவிலுள்ள ஐநா விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகம் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
முழுமையான விசாரணை எனத் தெரிவிக்கப்படும் விடயத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் நலன்கள் தொடர்பில் இதய சுத்தியுடன் ஆர்வம் கொண்டுள்ள நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதாக ஐநா விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment