தகவல் - ரஸ்மின் MIsc
இந்திய பிரதமர் நரேந்திர
மோடிக்கும்,
தமிழக
முதல்வர் ஜெயலிதாவுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக கடந்த 10.06.2014 அன்று ஆர்ப்பாட்டம்
ஒன்று நடைபெற்றது.
தேசிய அமைப்பின்
சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆட்ப்பட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
உருவ பொம்மையொன்றும் எரிக்கப்பட்டது.
இந்திய அரசின்
அனுசரனையில் செய்து கொள்ளப்பட்ட 13 வது அரசியல் சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்த
வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தெரிவித்துள்ளதை எதிர்த்தே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
13 ம் சீர்திருத்ததத்தை நடைமுறை படுத்தக் கோரி இலங்கை விவகாரத்தில் யாரும்
தலையிட வேண்டாம் என்றும், நாட்டைப் பிரிப்பதற்கு எத்தனிக்கும் யாருக்கும்
அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினார்கள்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு - காலி வீதியில் சிறிது நேரம்
பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டது.
Post a Comment