கடும் மழை: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு; 22 ,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு



கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சீரற்ற வானிலையால் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 5, 314 குடும்பங்களைச் சேர்ந்த 22 ,500 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
மண் சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கி களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1,658 குடும்பங்களைச் சேர்ந்த 6, 986 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
மத்துகம பிரதேசத்தில் 447 குடும்பங்களைச் சேர்ந்த 2,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகலவத்த மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேசங்களில் 550 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலும் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 832 ஆகவுள்ளது.

மாவட்டதில் 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 28 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, கொழும்பிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை.

சீரற்ற வானிலையால் காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 784 குடும்பங்களைச் சேர்ந்த 2, 574 பேர் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 93 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்திலும் கடும் மழையால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவட்டத்தில் 101 குடும்பங்களைச் சேர்ந்த 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.67 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 1,926 குடும்பங்களைச் சேர்ந்த 8,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முற்றாகவும் 71 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் தெவித்துள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்திலும் சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிர்க்கதிக்கு உள்ளாகி தவிக்கும் அன்பர்களுக்கு அவசியமான உலர் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை உடனடியாக வழங்கம் பொருட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கியுள்ளது. 

பின்வரும் உதவிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பெரிதும் எதிர்பார்க்கிறது

1-உலா் உணவுகள் (அரிசி, பருப்பு, சீனி, மா, பால் மா, டின் மீன், கருவாடு, தேயிலை, .....)
2-புத்தாடைகள் (சிறுவா், குழந்தைகள், பெரியோர்..)
3- பண உதவிகள்

மேற்குறிப்பிட்ட உதவிகளை 241A,Sri Saddharma Mawatha, Maliga watta, Colombo - 10 எனும் முகவரியில் அமைந்துள்ள எமது தலைமையகத்தில் நேரடியாக ஒப்படைக்க முடியும்.

பணமாக உதவி செய்ய விரும்பும் அன்பர்கள்

M.T.M. Farzan (வசூல் பிரதிநிதி) 

Hatton National Bank
Acc.No- 025020324642

எனும் வங்கிக்கணக்கில் வைப்பிலிட முடியும்.

முதல் நிவாரணக் குழு எதிர் வரும் 08.06.2014 ஞாயிறு அன்று கொழும்பிலிருந்து வெளிக்கிளம்பவுள்ளது. ஆதலால் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் உங்கள் உதவிகளை தந்துதவுமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger