வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பாதிக்கப் பட்டோருக்கான நிதி மற்றும் பொருள் உதவி கோரல்....



மனித நேயத்தை ஆசிக்கும் அன்பர்களே,

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

உதவிக் கரம் நீட்டிடுவோம்! தொப்புல் கொடி உறவுகளை காத்திடுவோம்!



வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பாதிக்கப் பட்டோருக்கான நிதி மற்றும் பொருள் உதவி கோரல்....


கடந்த ஜூன் 1ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 22 நபா்கள் பலியாகியுள்ளனா். பலா் தங்கள் வாழ்விடங்களை இழந்து நடுத் தெருவுக்கு வந்துள்ளனா். உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, படுக்க உறையில் இன்றி, உடுத்த உடையின்றி எம் தொப்புல் கொடி உறவுகள் வேதனையின் விளிம்பில் உள்ளனா்.

நாம் இருக்கும் போது நம் சொந்தங்கள் நாதியற்று நடுத் தெருவில் நிற்கலாமா?

ஒரு மனிதனை வாழ வைத்தவன் ஒட்டு மொத்த மக்களையும் வாழ வைத்தவன் போலாவான் என்பது இறை வாக்கு!

உங்கள் பொருளாதாரத்தை வைத்து ஒட்டு மொத்த மனித இனத்தையும் வாழ வைத்த நற்கூலியைப் பெற இப்பொழுதே தயாராகுங்கள்!

பின்வரும் உதவிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பெரிதும் எதிர்பார்க்கிறது

1-உலா் உணவுகள் (அரிசி, பருப்பு, சீனி, மா, பால் மா, டின் மீன், கருவாடு, தேயிலை, .....)
2-புத்தாடைகள் (சிறுவா், குழந்தைகள், பெரியோர்..)
3- பண உதவிகள்

உங்களால் இயன்ற பொருள் மற்றும் பண உதவிகளை கீழ் காணும் வங்கி இலக்கத்திற்கு உடனடியாய் வைப்பிலிடவும்.

M.T.M. Farzan

Hatton National Bank

Acc.No- 025020324642

உங்கள் உதவிகளை ஒப்படைக்க வேண்டிய இறுதித்திகதி 7-6-2014 (சனிக்கிழமை).

08 ஆம் திகதி சேகரிக்கப்பட்ட பொருட்களை விநியோகம் செய்வதற்காக ஜமாஅத்தின் முதல் வாகனம் வெளிக்கிளம்பவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேலதிக தொடா்புகளுக்கு -

M.T.M. பா்ஸான்
வசூல் பிரதி நிதி
0779481767


Sri lanka thowheed jamaath is organaizing a mega Flood Relief Project to those who have been affected in the heavy Rains all over the Island. Please send your contribution to Sri lanka thowheed jamath .

M.T.M. Farzan.
Hatton National Bank,
Acc.No: 025020324642

my mobile Number 0094779481767





















Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger