நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
புவாக்பிட்டிய பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளமையால் அப்பிரதேச மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தொடர்ந்தும் இப் பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றமையால் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post a Comment