15 வயது சிறுவனை தன்னினச் சேர்க்கைக்கு உட்படுத்திய 59 வயது நபருட்பட நால்வர் கைது
ஹுங்கம ரன்னப் பகுதி கிராமமொன்றில் 15வயது சிறுவனுடன் தன்னின சேர்க்கையில் ஈடுபட்டிருந்த 59வயது குடும்பஸ்தர் உட்பட நால்வரை ஹுங்கம பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளார்.
ஹுங்கம ரன்னப் பகுதி கிராமமொன்றில் 15வயது சிறுவனுடன் தன்னின சேர்க்கையில் ஈடுபட்டிருந்த 59வயது குடும்பஸ்தர் உட்பட நால்வரை ஹுங்கம பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை பிரதேச மக்கள் மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து சிறுவன் தகவலின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்களை அங்குணுகொலபெலஸ்ஸ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவன் அம்பாந்தோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றான். பொலிஸார் விசாரணை தொடர்கின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கடலினுள் பாய்ந்தது
மன்னார் நகரில் இருந்து பிரதான பாலம் வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினுள் பாய்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மன்னார் நகரில் இருந்து பிரதான பாலம் வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினுள் பாய்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
-மடு தொடக்கம் தலை மன்னார் வரைக்குமான புகையிரத பாதை அமைக்கும் பணிகள் தற்போது மிக வேகமாக இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் தனியார் டிப்பர் வாகனங்கள் பல கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளது.
நாளாந்தம் பல நூற்றுக்கணக்காண டிப்பர் வாகனம் மணல் மண் மற்றும் கொங்கிரீட் கட்களை ஏற்றிக்கொண்டு மன்னார் வந்து செல்வது வழமை.
இந்த நிலையில் நேற்று மாலை புகையிரத பாதை வேலைக்காக மன்னாருக்கு பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் பொருட்களை இறக்கி விட்டு மன்னார் பிரதான பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது,
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் குறித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தின் அருகில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த 6 கொங்கிரீட் தூண்களை உடைத்துக்கொண்டு கடலினுள் பாய்ந்துள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ள போதும் அதில் பயணித்த எவருக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment