வேனில் கடத்தப்பட்ட சிறுவனை வீதியில் வீசியமை பற்றி கேள்வி-
12 வயதான பாடசாலைச் சிறுவனை கடத்திச் சென்று பின்னர் வீதியில் வீசிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 வயதான பாடசாலைச் சிறுவனை கடத்திச் சென்று பின்னர் வீதியில் வீசிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி பகல் தங்கொட்டுவ, வெகட மஹா வித்தியாலயத்திற்கு முன்னால் இச் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். இந்நிலையில் கிரிஉல்ல பிரதேச வீதியில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.
பாடசாலை முடிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது வேன் ஒன்றில் தான் கடத்தப்பட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
13இல் திருத்தம் செய்யாது புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு கோரிக்கை-
13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றத்தை எற்படுத்தாது பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பேச்சுவார்த்தை நடாத்தி புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க பேராயர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலைமை குழப்பம் அடையும் எனவும் அப் பேரவை சுட்டிக் காட்டியுள்ளது.
கத்தோலிக்க பேராயர் பேரவையின் தலைவர் ஆயர் மெல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றம் செய்வதன் மூலம் அதிகாரம் ஒரு இடத்தில் மையப்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடிய சாத்தியம் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
வடக்குப் பிரச்சினையை தேசியப் பிரச்சினையாகக் கருதி தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் உரிய தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றங்களை ஏற்படுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது என கத்தோலிக்க பேராயர் பேரவை கோரியுள்ளது.
Post a Comment