இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான யுத்தம் தொடங்கிவிட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு நாம் திரும்பத்திரும்ப எச்சரிக்கை விடுத்தோம். இனிமேலும் எச்சரிக்கை விடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தை நாம் விரைவில் கவிழ்ப்போம் என்றும் அவர் சொன்னார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து விட்டது. அதற்காக சமயத்தலைவர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் உட்பட பலத்துறைகளைச்சேர்ந்தோரும் வீதியில் இறங்கி போராடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நியாயப்படுத்த முடியாத மோசமான தொழில்முயற்சிகளிலும் விரும்பத்தகாத நோக்கங்களிலும் அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்தமையினால் அது தற்போது பூச்சிய மட்டத்தை அடைந்துள்ளது என்றும சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கம்பனிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மட்டுமே அரசாங்கம் வெற்றிக்கண்டுள்ளது. கடந்த வரவு-செலவுத்திட்டத்தில் இந்த கம்பனிகளுகளுக்கு கம்பனி வரிகளிலிருந்து அரசாங்கம் விலக்களித்திருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment