லண்டன் சென்றுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழு, பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மாவை சந்தித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த ஆர்.பீ.பெரேரா மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மாஹாநாமஹோ உள்ளிட்டோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றுள்ள இந்த குழு, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கமலேஷ் ஷர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அடைய வேண்டிய இலக்குகள் தொடர்பில் கமலேஷ் ஷர்மா குழுவினருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியத் தூதுவரை அழைக்குமாறு வலியுறுத்தல்-
சரப்ஜித்சிங் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கைக்கு, பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி, பாகிஸ்தான் மீது, இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும். அந்த நாட்டுடன் உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்க வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மங்கச்செய்கிறது. இந்தியாவை பலவீன நாடாக காட்டுகிறது.
சரப்ஜித்சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகையும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
சோமாலியாவில் கடும் பஞ்சம்-
சோமாலியாவில் 2011, 2012ஆம் ஆண்டுகளில் பஞ்சம் மற்றும் உணவு பாதுகாப்பின்மையால் மட்டும் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
சோமாலியாவில் 2011, 2012ஆம் ஆண்டுகளில் பஞ்சம் மற்றும் உணவு பாதுகாப்பின்மையால் மட்டும் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் 50 சதவீதமானவர்கள் குழந்தைகள் என்றும் அதில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 33 ஆயிரம் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சிக்கு மட்டும் ஒ கோடியே 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
1992ஆம் ஆண்டு சோமாலியாவில் மட்டும் வரட்சியால் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 வருடங்களாக நடந்த உள்நாட்டு சண்டையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில் பன்னாட்டு உதவியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகின்றது.
Post a Comment