
தெஹியோவிட்ட பிதேசத்திலுள்ள வீடுகளை உடைத்துத் திருடி வந்தார்கள் என்ற சந்தேகத்தில் 5 பெண்கள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தெஹியோட்ட, கீரியகொல்லே பகுதிகளிலுள்ள வீடகளை உடைத்துத் திருடியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்கள் பயன்படுத்திய வாகனமும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் சுமார் அறரை இலட்சம் ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் திருடியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்தத் திருட்டுக் கும்பலுடன் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் படவுள்ளனர்.
பரிந்துரைகளை அமுல்படுத்துமாவு அவுஸ்திரேலியா வலியுறுத்தல்-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கொனர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கொனர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு நல்லிணக்க பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதே, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மையாக அமையும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கமும் இதனையே எதிர்பார்ப்பதாகவும் அவுர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதிகள் கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படையினருக்கும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கொனருக்கும் இடையில் பேச்சுவர்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் எட்மிரல் ஜெயந்த கொலம்பகே மற்றும் ப்ரெண்டன் ஓ கொனருக்கு இடையிலான இந்த சந்தப்பு நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் கேட்பது போல் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தேவையில்லை -ஜனாதிபதி-
இலங்கையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று அவசியம் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இலங்கையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று அவசியம் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
அதில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் செய்தி ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தேர்தல்கள் ஆணையாளர் தமது கடமையை சிறப்பாக முன்னெத்து வருகின்றார். இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு என சுயாதீன ஆணைக்குழு ஒன்று அவசியமில்லை. எனவே ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment