குடும்பப் பெண்ணை காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு-
வீட்டில் தனித்திருந்த இரு பிள்ளைகளின் தாயை வாயைப் பொத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவரை பிபிலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வீட்டில் தனித்திருந்த இரு பிள்ளைகளின் தாயை வாயைப் பொத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவரை பிபிலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மொனராகலை, பிபிலை, கொலன்கெட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் கூலி வேலைக்காக வெளியில் சென்றுள்ளார்.
பிள்ளைகள் வீட்டுக்கருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது வீட்டுக்கு வந்த நபரொருவர் பெண்ணை தூக்கிச் சென்று வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பிபிலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண் மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை இந்திய ராஜதந்திர உறவில் பாதிப்பில்லை-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போதும், அதனால் நிலையான உறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்ட போது, இலங்கைக்கு எதிரக செயற்பட வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது.
எனினும் இது இலங்கை இந்திய உறவில் தாக்கத்தை செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றம் செல்வதற்கும் தயார் -மாவை சேனாதிராஜா எம்.பி-
எங்கள் மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டும் இதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை செல்வோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற காணி சுவீகரிப்பைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரதேச சபைக்கும் தமது பிரதேசத்திலுள்ள மக்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். காணி சுவீகரிப்புக்கு எதிரான வாழ்வுரிமைக்கான எமது போராட்டம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் போராட்டங்களை மேற்கொள்வதற்கு பிரதேச ரீதியாக கட்சிக்கு அப்பால் சிவில் சமூகக் குழுக்களையும் உள்வாங்க வேண்டும்.
இதன் மூலம் நாங்கள் தொடர் போராட்டமாக மாவட்ட செயலகத்தை முடக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment