6 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த நபரொருவருக்கு அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் விஷ ஊசி ஏற்றி புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டீவன் ஸ்மித் (46 வயது) என்ற மேற்படி நபருக்கு தென் ஒஹியோவிலுள்ள லுகாஸ்வில்லேயிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் காதலியின் மகளான அடம்ன் கார்ட்டரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது சட்டத்தரணிகள் ஸ்டீவன் ஸ்மித் குடிபோதையில் பாலகியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அவருக்கு பாலகியை கொல்லும் எண்ணம் கிடையாது எனவும் வாதிட்டனர்..
எனினும் அவர்களது கூற்றை ஏற்க மறுத்த நீதிபதி அப்பாவியான 6 மாத பாலகியை தனது பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி அவரை படுகொலை செய்துள்ளமை மன்னிக்க முடியாத குற்றமென தெரிவித்து மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தார்.
ஸ்டீவன் ஸ்மித்துக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை 3 அடி தூரத்திலிருந்து கண்ணாடிச் சுவருக்கு பின்புறமிருந்து அடம்னின் தாயாரான கேஷா பிறையி, பிறையின் தந்தையான பற்றிக் ஹிக்ஸ், ஸ்டீவன் ஸ்மித்தின் ஒரே மகளான பிறிட்னி (21 வயது) ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment