இரத்த தானம் வழங்கும் முதன்மை நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்..!! முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முன்னிலை


இரத்த தானம் வழங்குவதில் முதன்மையான நாடுகளில் இலங்கையும் ஒன்று எனவும் வருடாந்தம் சுயாதீனமாக 3,50,000 அலகு இரத்தம் தானமாக பெறப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
எதிர்வரும் 14 ஆம் திகதி உலக இரத்த நன்கொடையாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ‘தாய்மாரைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இரத்தம்’ எனும் தொனிப் பொருளில் இம்முறை இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
உலக இரத்த நன்கொடையாளர் தின சர்வதேச மாநாடு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறும் இந்த சர்வதேச நிகழ்வில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுகாதாரத் துறை பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்படி மாநாட்டை முன்னிட்ட செய்தியாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றதுடன் மாநாட்டில் குடும்ப சுகாதார செயலணியின் பிரதிப் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா விளக்கமளித்தார். உலகில் பிரதி வருடமும் பிரசவத்தின்போது ஏற்படும் நோய்களினால் 2,80,000 தாய்மார் மரணமடைகின்றனர். இவற்றில் 99 வீதமான மரணங்கள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
இலங்கையில் இத்தகைய மரணங்கள் வருடாந்தம் 120ற்கும் 150ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகவுள்ளன. இது 29மூ வீதமாகவுள்ளதுடன் பிரசவசத்தின் போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கே இதற்கு முக்கிய காரணமாகுமெனவும் அவர் தெரிவித்தார். இதனால் இந்த மரணங்களைத் தடுப்பதற்கு பாதுகாப்பான இரத்தம் வழங்குதல் பெரும் உறுதுணையாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். பிரதி வருடமும் உலகில் மில்லியன் கணக்கான மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு இரத்த பரிவர்த்தனை சேவை உதவியளிக்கிறது.
அத்துடன் சத்திரசிகிச்சைகள் உட்பட ஏனைய சிகிச்சைகளுக்கும் இதன் பயன்பாடு உறுதுணையாகவுள்ளது. இலங்கையில் வருடாந்தம் சுயாதீன இரத்த நன்கொடையாளர்களினால் 3,50,000 அலகு இரத்தம் தானமாக வழங்கப்படுகிறது. இந்த அனைத்து இரத்தப் பொதிகளும் எச். ஐ. வி., ஹெபடய்டிஸ். மலேரியா. சிபிலஸ் உட்பட 5 நோய்கள் தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.
இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள உலக இரத்த நன்கொடையாளர் தின மாநாட்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரத்த நன்கொடை யாளர் வாரம் இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள் ளதுடன் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு. திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலிருந்து வாகனப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவை 14 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளன.
அன்றைய தினம் கொழும்பிள்ள இரத்த பரிவர்த்தனை தேசிய நிலையத்துக்கருகில் இரத்த நன்கொடையாளர்கள் கௌரவிக்கப் படுவதுடன் பொதுமக்கள் விசேட கொடியில் கையொப்பமிடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன. இதனையொட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி 2000 பேர் இரத்த தானம் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரத்தக் கொடை வழங்குவதில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முன்னிலையில்

உலக இரத்த தான நன்கொடையாளர் தின மாநாட்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மக்களை ஊக்குவிக்கும் நிகழ்சி குறிப்பிடத்தக்கது.  
உலக பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கவிருக்கும் உலக இரத்ததான விழாவில் முஸ்லிம்கள் சார்பாக இரத்த கொடை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் அமைப்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவ்விருதுக்காக 2013 முதல் 2014 ஜூனுக்கு இடைப்பட்ட ஒரு வருட கால இரத்த தான முகாம்கள் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளன. இதில் 2013 ஜூன் மாதம் முதல் 2014 ஜூன் மாதம் வரை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நாடளாவிய ரீதியில் 2300 க்கும் அதிகமான யுனிட்டுகள் இரத்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.
இதன் முதற் கட்டமாக கண்டி மாவட்ட இரத்த தான வங்கியினால் 05.06.2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான ஊக்குவிப்பு ஊர்தியின் போது கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பாக அதிகம் இரத்த தானம் செய்தமைக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அகுரணை கிளை கௌரவிக்கப்பட்டது. 
வெற்றிகரமாக முடிந்தது SLTJ இரத்த தானத்தை ஊக்குவிப்பு மாநாடு 05.06.2014





கண்டி இரத்த வங்கிக்கு SLTJதுனை செயளாலர் ஹிஷாம் அவர்கள் வழங்கிய  பேட்டி 05.06.2014


இரத்த தானத்தை ஊக்குவித்து மக்களை உற்சாகப்படுத்தும் விழிப்புணர்வு உரையை காண கீழே உள்ள இணைப்புக்கு செல்லவும்.
https://www.facebook.com/photo.php?v=1415933198689127&set=vb.100008173805186&type=2&theater
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger