உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் ஆரம்பமாவதற்கு இன்னமும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அனைவரது கவனமும் அதில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் மீது குவிந்துள்ளன.
ஆனால், அந்த அணிகளில் பாகிஸ்தான் இல்லாத போதிலும், அந்த நாடும் இந்த கால்பந்து போட்டிகளுக்காக கடுமையாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது அந்த பிரேசில் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கால்பந்துகளை பாகிஸ்தானில் தயாரிக்கிறார்கள்.
உலகக் கோப்பை ஆட்டங்கள் உட்பட உலக மட்டத்தில் பல கால்பந்து போட்டிகளுக்கு பந்துகளை தயாரிக்கும் ஒரு நாடாக பாகிஸ்தான் இருந்துவந்தது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அது இந்த தயாரிப்பு போட்டியில் சீனாவிடம் தோற்றுவிட்டது.
பாகிஸ்தானிய தொழிற்சாலைகளில் உயர் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததுதான் இந்த பின்னடைவுக்கு காரணமாகும்.
தற்போது பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் சியல்கோட் பிராந்தியத்தில் இருக்கும் தொழிற்சாலை ஒன்று உலக உயர்தர ஆட்டங்களுக்கு கால்பந்துகளை மீண்டும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
இவை குறித்த காணொளி.
Post a Comment