தெற்கு டெல்லியில் காவல் துறையின் துணையோடு வெளிநாட்டினர் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராக்கி பிர்லா கோரிக்கை வைத்தார்.
இதேபோல், மாமியார் வீட்டை சார்ந்தவர்களால் எரிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருமகள் தொடர்பான சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய அமைச்சர் சோம்நாத் பாரதியின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது என இரு புகார்களை கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்தார்.
சந்திப்பின் போது அமைச்சர்கள், சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் புகாருக்குள்ளான காவலர்கள் இருவரும் இருந்தனர். பின்னர் இதே கருத்தை வலியுறுத்தி உள்துறை அமைச்சர் ஷிண்டேவிடமும் அக்கட்சி புகார் தெரிவித்ததுள்ளது. தங்களது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் அவரது வீடு முற்றுகை செய்யப்படும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment