நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாதாந்தம் சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களில் சுமார் 100 சிறுவர்கள் பல்வேறு பாலியல் இம்சைகளுக்கு உள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் அதிகமானோர் 15 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்த வயதிலேயே பெண் பிள்ளைகள் கர்ப்பமாகின்றமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய பெண் பிள்ளைகளின் தாய்மார் பெரும்பாலும் வெளிநாடு சென்றிருப்பதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment