இன்று மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதேவேளை கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரங்கள் தலைமைத்துவ குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி தலைமைத்துவக் குழுவுக்கு கரு ஜெயசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, லக்ஸ்மன் கிரியெல்ல, கபிர் காசிம், தலதா அத்துகோரளை, திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த கால தேர்தல் தோல்விகளை அடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இன்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ குழுவில் இருந்து சஜித் விலகல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ குழுவில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகியுள்ளார்.
தலைமைத்துவ குழுவில் குறைப்பாடுகள் இருப்பதாக கூறியே அவர் அதில் இருந்து விலகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகளை தீhக்கும் வகையில் இன்று மாலை தலைமைத்துவக் குழுவுக்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியது.
இதில் கரு ஜெயசூரியவின் தலைமையிலான குழுவில் சஜித் பிரேமதாஸ உட்பட்டவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும் தற்போது சஜித் பிரேமதாஸ தாம் குழுவில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Post a Comment