அமெரிக்க அரசியல் சண்டை: அரசுத் துறைகள் மூடல்



அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து உடன்பட முடியாததால், அமெரிக்க அரசுத் துறைகளை மூட அமெரிக்க அதிபர் அலுவலம் உத்தரவிட்டிருக்கிறது.
பல அரசு அலுவலகங்கள் மூடப்படும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி வீட்டிலேயே இருக்குமாறு கோரப்படுவார்கள்.
கடந்த 17 ஆண்டுகளில், முதன் முறையாக, ஒரு பகுதி அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படுவது இப்போதுதான் .
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கிய தருவாயில், வரவுசெலவுத் திட்ட மசோதா, குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் அவைக்கும், ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் அவைக்கும் இடையே மாறி மாறி சென்று வந்தது.
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அதிபர் ஒபாமாவின் சுகாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்தவேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் கோருவதை ஜனநாயகக் கட்சியினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

மோதலின் விளைவுகள் என்ன ?

சுதந்திர தேவி சிலை மூடப்படும் -- அரசியல் மோதலின் ஒரு விளைவு
இந்த அரசியல் சண்டையால் அமெரிக்க மக்களில் சிலருக்கும், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றுக்கும் விரைவாகவே பாதிப்பு இருக்கும்.

உதாரணத்துக்கு பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்கள் திறக்காது என்ற நிலையில், அதை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

உதாரணத்துக்கு நியுயார்க்கின் கடல்பரப்பில் இருக்கும் பிரசித்தி பெற்ற சுதந்திர தேவி சிலை இது ஒரு தேசிய சின்னம். அது சுற்றுலாப் பயணிகளூக்குத் திறக்கப்படாது போகும்.

அமெரிக்காவில் பாஸ்போர்ட் அலுவலங்கங்கள் திறக்கப்படாது. அது போல வெளிநாடுகளில் அமெரிக்க விசா தரும் அலுவலகங்கள் மூடப்படும். இதனால் இந்த நெருக்கடி தீரும் வரை அமெரிக்க விசா வாங்க முயலும் வெளிநாட்டு மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்கவேண்டியதுதான்.

அமெரிக்காவிலேயே, சுற்றுச்சூழல் பராமரிப்பு, நகரங்களில் குப்பை கூளங்களை அகற்றுவது போன்ற பொதுச்சுகாதாரப் பணிகள் நிறுத்தப்படும்.
சில நல்ல விஷயங்களும் நடக்கும்-- கார் போன்ற வாகனங்களை நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் பாதிக்கப்படும். பார்க்கிங் டிக்கெட் போட வார்டன்கள் இருந்தால்தானே அதைச் செய்ய முடியும்.

விமானங்கள் பறக்கும், குண்டுகள் பாதுகாப்பாகவே இருக்கும்

விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாது
'ஏர் ட்ராபிக் கண்ட்ரோல்' என்ற விமான போக்கு வரத்தைக் கண்காணிக்கும் வேலை பாதிக்கப்படாது.
அது போல அமெரிக்காவின் அணுகுண்டுகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரிகளும் வேலையில்தான் இருப்பார்கள் . எனவே குண்டுகள் தவறான கைகளுக்குப் போய்விடவோ அல்லது எதேச்சையாக வேறொரு நாட்டில் விழவோ வாய்ப்பில்லை.
மற்ற சிறிய மற்றும் பெரிய விளைவுகளும் ஏற்படலாம்.
மொத்தம் உள்ள இருபது லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 7 லட்சம் ஊழியர்களுக்கு வேலை இருக்காது , அல்லது வேலை செய்தாலும் சம்பளம் தரப்படாது, தற்காலிகமாகவாவது.

இந்த அரசு அலுவலகங்கள் மூடப்படுவது சிறிது காலத்துக்கே என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவானதாகவே இருக்கும், ஆனால் இது மேலும் சில வாரங்கள் இழுபட்டால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும்.

எப்படியிருந்தாலும், நாட்டின் அரசியல் அமைப்பு மற்றுமொரு நிதி நெருக்கடியை எதிர்நோக்குகிறது.
அமெரிக்கா எந்த அளவு கடன் வாங்கலாம் என்பது குறித்து ஒரு வரம்பு இருக்கிறது. 
அது அமெரிக்க நாடாளுமன்றத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உயர்த்தப்பட்டால் தவிர , மத்திய அரசு அதன் செலவினங்களை சமாளிக்க முடியாமல் போகும். 
கடன் தவணையை கட்டமுடியாமல் போவது என்பதுதான் நிதித் துறைக்கு இருக்கும் பெரிய கவலை.
அமெரிக்க அரசுக்கு இருக்கும் கடன் என்பது ஒரு பெரிய பாதுகாப்பான முதலீட்டுக் கருவி என்ற வகையில், அமெரிக்கா இந்தக் கடன் தவணையைக் கட்டமுடியாமல் போனால் உலக நிதிச்சந்தைகளில் அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். ஆனால் அரசாங்கம் , ஒப்பந்தக்காரர்களுக்கு தரவேண்டிய தொகைகளை தராமல் நிறுத்துவது அல்லது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் நிறுத்துவது போன்றவற்றை செய்யலாம்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு பாதிப்பு ?

அமெரிக்க மத்திய வங்கிக்கும் சிக்கல்
இதை செய்வது என்பது அமெரிக்க உள்நாட்டில் சில பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும், வளர்ச்சியை பலவீனப்படுத்தும்.

இந்த அரசு நிதிகள் மீதான முட்டுக்கட்டை நிலை என்பது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு மறைமுகமாகப் பார்த்தால் ஒரு சாத்தியக்கூறான பிரச்சினைதான்.

அமெரிக்க மத்திய வங்கிக்கும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் பலமாக புத்துயிர் பெற ஊக்குவிக்க , பணநோட்டுக்களை அச்சடித்து சந்தையில் விடும் 'குவாண்டிடேடிவ் ஈஸிங்' என்ற திட்டத்தை படிப்படியாக குறைப்பது என்ற திட்டத்தை எப்போது தொடங்குவது என்ற பிரச்சினையை அதற்கு இந்த நெருக்கடி ஏற்படுத்தும்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger