அபாயா அணிந்த நிலையில் கைதான ஆண் சந்தேக நபருக்கு விளக்கமறியல் / இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டமையைக் கண்டித்து போராட்டம் / மலையகத்தில் 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


பிறைந்துரைச்சேனை கைக்குண்டுத் தாக்குதல்: அபாயா அணிந்த நிலையில் கைதான ஆண் சந்தேக நபருக்கு விளக்கமறியல்
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வாழைச்­சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்­து­ரைச்­சேனைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட கைக்­குண்டுத் தாக்­குதல் தொடர்பில் தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தேக நபர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்­க­ம­ரி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
வாழைச்­சேனை, பிறைந்­து­ரைச்­சேனை இரண்டாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த இவர் ஓட்­ட­மா­வடி – காவத்­த­முனை பகு­தியில் இருந்து கல்­முனைப் பகு­திக்கு தப்பிச் செல்லும் வேளையில் களு­வாஞ்­சிக்­கு­டியில் வைத்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு வாழைச்­சேனை நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே மேற்­படி சந்­தேக நபரை எதிர்­வரும் 28ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யளில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.
பிறைந்­து­ரைச்­சேனைப் பகு­தியில் கடந்­த­வாரம் கைக்­குண்டு வீசப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இவர் முஸ்லிம் பெண்கள் அணியும் அபா­யாவை அணிந்து கொண்டு முஸ்லீம் பெண் போன்ற வேடத்தில் தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்ற வேளையில் பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வலின் பிர­காரம் இவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் இரா­ணுவ ஊர்­காவல் படை­ய­ணியில் இணைந்து கொண்ட இவர் நாவ­லடி, வெலி­கந்த போன்ற இரா­ணுவ முகாம்­களில் கட­மை­யாற்றி பின்னர் கட­மையை விட்டு வில­கி­யி­ருந்தார்.
இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் தொடர்­பான பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­பட்ட இவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்-
பலத்த மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பி.ஜீ.குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு, கற்பாறைகள் சரிந்து விழுதல், பலத்த காற்றினால் கூரைகள் தூக்கி வீசப்படுதல் மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 280 பேர் தமது இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத் தவிர மலையகத்தில் பாதிக்கப்பட்ட மேலும் சில குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டமையைக் கண்டித்து போராட்டம்-
மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியில்; மட்டக்களப்பு இந்து அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger