சூடான நீரினுள் அமர்ந்தவாறே கரை ஓட்டிச் சென்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு காரை அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பொறியிலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இக்கார் ஒரு நடமாடும் நீர்த்தொட்டியாக உள்ளது. அது மட்டுமன்றி அதிவேகமாக செல்லும் கார் நீர்த்தொட்டியாக இதனை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பில் வெய்கர் மற்றும் டங்கன் போஸ்டர் என்ற இரு பொறியியலாளர்களே இக்காரினை உருவாக்கியுள்ளனர். இதற்காக காடிலக் காரின் 1969ஆம் ஆண்டு மாதிரி ஒன்றை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைத்துள்ளனர்.
‘கார்பூல் டீவில்லி’ என அழைக்கப்படும் நீர்த் தொட்டி காரினுள் 2268 லீற்றர் நீரினை சேமிக்க முடியும். அத்துடன் அந்நிரை வெப்பமேற்றி கதகதப்பாக 39 பாகை செல்சிஸில் பேணவும் முடியுமாம். ஆனால் காரின் பாகங்கள் நீரினால் பழுதடையவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்காரினை உருவாக்க கடந்த 6 வருடங்களாக மேற்படி இரு பொறியியலாளர்களும் முயற்சி எடுத்துள்ளனர். இதில் தற்போது காணப்படுகின்ற ஒரு சில கோளாறுகளையும் ஓகஸ்ட் மாதத்திற்குள் திருத்தியமைக்க முடியமாம். அத்துடன் இக்காரின் மேம்பாட்டுக்காக நிதி சேகரிக்கும் முயற்சியிலும் இவர்கள் இறங்கியுள்ளனர்.
‘இதற்கு முதல் எவரும் நீர்த்தொட்டிக் காரில் கழுத்துவரை நீரில் அமர்ந்து மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததில்லை’ என பொறியிலாளர்கள் இருவரும் கூறுகிறார்கள்.
Post a Comment