அளுத்கம புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் – Photos

அளுத்கம, தர்காநகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் வன்முறையினால் சேதமாக்கப்பட்ட கடைகள், வீடுகள் என்பனவற்றை புனர் நிர்மாணம் செய்யும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடக மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புனரமைப்புப் பணிகள் இராணுவத்தினரின் பொறியியல் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 700 பேரைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக வேண்டி சுமார் 200 மில்லியன் ரூபாயை அரசாங்க திரைசேரி மீள் குடியேற்ற அமைச்சினூடாக இராணுவத்துக்கு வழங்கியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 94 வீடுகளும் 134 வியாபார நிலையங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் ஊடக மையம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளது.   




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger