சம்பவங்களின் தொடர்ச்சி, வன்முறையின் தீவிரம் ஆகியவை காரணமாக அளுத்கம யூலை 83ஐ நினைவுபடுத்துகிறது.
தற்போதைய
காலகட்டமே
மிக
மோசமானது
என
நாம்
சொல்லும்
போது
இருண்ட
தொடர்ச்சி
ஒன்று
உள்ளதை
மறக்கமுடியாது.
அதே
வேளை
கடந்த
காலத்தில்
இருந்து
வித்தியாசமான,
தொடர்ச்சியற்ற
ஒரு
போக்கும்
காணப்படுகிறது.
இதன்
காரணமாகவே
அளுத்கம
மிக
பயங்கரமானது.
ஒரு சூழலிற்கு எதிராக நாம் வெற்றிகரமாக போராட வேண்டும் என்றால் முக்கியமான தீய சக்தி எதுவென்று முதலில் அடையாளம் காண வேண்டும். இதுவரை அது ஆளும் பரம்பரையின் அச்சமூட்டும் முகமூடி எனவும்.; சிங்கள பௌத்தத்தின் இருண்ட அவதாரம் எனவும,; நவ தாராளவாத முதலாளித்துவத்தின் ஒரு கருவி எனவும் சொல்லப்பட்டுள்ளது. இது தனித்தனியானதாகவும் இருக்கலாம் அனைத்தும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் (பொதுபல சேனா. அளுத்கம) இவை எதுவும் ஆபத்தானவையோ அல்லது முக்கியமானவையோ இல்லை.
அளுத்கமவில் பொதுபல சேனாவின் ஞானசாரா தேரர் (அந்த அமைப்பின் முக்கிய கொள்கை வகுப்பாளர் அல்ல, ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு தீனி போடக்கூடியவர்) ஆற்றிய உரையில் மிக முக்கியமான விடயம் என்ன? அந்த உரையை மிகவும் உன்னிப்பாக அவதானித்தால் அரச அதிகாரமே அவர்களது நோக்கம் என்பது விளங்கும். அந்த உரையில் அரசாங்கத்திற்கு ஆணையிடும் நோக்கமும், ஒருவகையில்; அரசாங்கத்தை கைப்பற்ற விரும்புவதும் புலனாகும். பொதுபலசேனா பேச்சாளர், அரச உரிமையையும் அது எப்படி செயற்பட வேண்டும் என சொல்வதற்கான உரிமையையும் தனதாக்கி கொள்கிறார். அரசு உரிமையை அவர் தனதாக்கிக் கொள்ளவில்லை, தன்னுடைய அமைப்;பிற்கும் கோரவில்லை..... அரசிற்கான உரிமையானது இன, மத அடிப்படையில் கோரப்படுகிறது- சிங்கள பௌத்தம். ஆனால் உண்மை அங்கே ஒளிந்துள்ளது. சிங்கள பௌத்த மதகுருமாரை அடிப்படையாக வைத்து அது இந்த உரிiயை கோருகின்றது.
இது புதிய விடயம். இந்த அமைபிற்கு ராஜபக்சாக்களின் ஆதரவு இருக்கலாம். (ஒருமை அல்லது பன்மை) அல்லது 1990 களிலும் அதன் பின் தலிபானுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு ஆதரவு வழங்கியது போன்று அரச நிர்வாகத்தின் சிலரது –ஆதரவு காணப்படலாம். நாங்கள் முன்னரும் இந்த இடத்தில் இருந்திருக்கிறோம். ஞானசார தேரர் புதிய எல்லே குணவன்ச, தற்போதைய புதிய போக்கிற்கு உரிமையாளர் யாராகயிருந்தாலும், எவருடைய ஆதரவு இருந்தாலும் அது நிச்சயமாக பூதாகரமானதாகவுள்ளது உண்மை.
அதிகார மையங்கள் யாரிடம் என்ற விடயத்தில் அளுத்கம, யூலை 83 ஐ போன்று காணப்பட்டது. யார் நிலைமையை கட்டுப்படுத்துவது. அரச இயந்திரமா அல்லது வீதியில் உள்ள பௌத்தர்களா? ஆனால் பொதுபலசேனா அளுத்கமவில் இதற்கும் அப்பால் ஒரு கேள்வியை எழப்பியது. அரசை, அது செல்லும் திசையை, அதன் நடவடிக்கைகளை தீர்மானிப்பது யார்? சட்டபூர்வமான அரச அதிகாரமா அல்லது பௌத்த பிக்குகளா? இதைவிட முக்கியமான கேள்வி சட்ட பூர்வ தன்மை யாருக்கு உள்ளது என்பது. தெரிவு செய்யப்பட்ட மக்கள் அதிகாரமா அல்லது மதகுருக்களின் அதிகாரமா?
பொதுபல சேனா என்ன செய்ய விரும்புகிறது என்றால் அது அரசை கட்டுப்படுத்த விரும்புகிறது. பல தசாப்தங்களாக பௌத்த மதகுருமார் ஆற்றிய செயற்பாடுகளில் இருந்து இது ஒரு மிகப் பெரிய பாய்ச்சல். ஜானசாரரின் உரையில் அரசை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான உரிமை கோரும், கட்டுப்படுத்தும் சக்தி என்ற தோற்றமும் தென்படுகிறது. அவர் நேரடியாக இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள்களை விடுகிறார். இராணுவத்தினரும் பொலிசாரும் சிங்களவர்கள் என்பதை அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
இந்த தந்திரோபாயம் சுலபமானது. அரச சாதனங்களின் சமூகவியல் உருவாக்கத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசின் மேல் செல்வாக்குச் செலுத்தி அதனை பௌத்தர்களின் நலனை மையமாக கொண்டு செயற்படச் செய்வது மாத்திரமல்ல, வேறு சில தெளிவான பணிகளும் உள்ளன. வெளிப்படையான ஆதிக்கம் உயர்மட்டம் வரை(மேலிருந்து கீழ் வரையும்) முழுமையான ஆதிக்கம், அதிகாரத்தில் தனிஉரிமை, பொருளாதார வல்லமை போன்றவற்றை அது எதிர்பார்க்கிறது. பொதுபல சேனாவின் உரை என்பது சிங்கள பௌத்த ஆட்;;சிக்கான ஒரு வடிவமல்ல, மாறாக இனவெறி என வர்ணிக்கப்பட கூடியது அது, இன்னும் தெளிவாக சொல்வதென்றால் அடிமைப்படுத்துவது.
அரசை கட்டுப்படுத்தும் அமைப்பு –அரசை இயக்குபவர்கள் -பௌத்த துறவிகள்-பொது பல சேனா இதற்கு தலைமை தாங்கும்.
அளுத்கமவில் 3 முஸ்லிம்களும் துப்பாக்கிச் சூட்டுக்கே பலியானர்கள் என தெரிய வருகிறது. இது ஒரு புதிய போக்கை, ஆயுதம் ஏந்திய துணைப்படையொன்றை சுட்டி நிற்கின்றது. இலங்கை இராணுவத்தையும் பொலிஸாரையும் பௌத்த சிங்கள துறவிகளின் ஆயுதக் குழுவாக மாற்றுவதே பொதுபல சேனாவின் நோக்கம்.
இந்த திட்டம் சாத்தியப்படுமா? இந்த திட்டத்திற்கு உயிர் கொடுத்து 6 தசாப்தங்களாகின்றது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இந்த திட்டம் அடை காக்கப்பட்டது. சோம தேரரின் மரணக் கிரிகைகளிலேயே இது உச்ச நிலை எட்டியது. முட்டை இப்போது பொரிக்கத் தொடங்கி உள்ளது. உள்ளே உள்ள தீமையின் தலை தென்படுகிறது. இந்த தீய சக்தி இனவாதமோ மதவாதமோ, நவ தாராளவாத முதலாளித்துவமோ, நவ ஏகாதிபத்திய தந்திரோபாயமோ - ராஜபக்சிசமோ இல்லை. இது இன மத- பாசிசம். இதன் நோக்கம் மத பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சமூக .அரசியல் ஒழுங்குமுறையை ஏற்படுத்துதல்;, அதன் பாசிச குணாதிசயம் அரசிற்கான அதன் உரிமையை கோருகின்றது.
இது ராஜபக்சாக்களால் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரோபாயத்திற்கு அப்பாற்பட்டது. . ஞானசாரர் அளுத்கம உரையில் ஜனாதிபதியை கண்டிக்கும் விதத்தில் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. இலங்கையில் சமூக மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. பொதுபலசேனா அதனை அரசியல் அதிகார மாற்றமாக மாற்றுவதற்கு முயல்கிறது. அளுத்கம அதற்கான ஒரு பரிசோதனை களம்.
பொதுபல செனாவின் தந்திரோபாயம் 3 விடயங்களை உள்ளடக்கியது. பௌத்த பிக்குகள், காடையர்கள், இராணுவம். முதலாவது திட்டம் பௌத்த பிக்குகளின் மேலாதிக்கத்தின் கீழ் இந்த 3 சக்திகளும் ஆள்வது. 2வது திட்டம் பௌத்த மதகுருமாரின் ஆதரவுடன் இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவுவது. 3வது முதலாவது திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்கக்கூடிய அரசியல் வாதி ஒருவரை பதவியில் அமர்த்துவது.
இலங்கை முழுவதும் முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் எதிரான கலவரங்களை உருவாக்குவது, வடமாகாண சபையை இராணுவம் மூலம் கவிழ்ப்பது. குழப்பத்தையும் நெருக்கடியையும் உண்டாக்குவது. இவை அனைத்தும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது தமது விருப்பத்திற்குரிய ஆட்சியாளரை அமர்த்துவதற்கான திட்டங்கள்.
பொதுபல சேனாவை எப்படி தோற்கடிப்பது. பல தந்திரோபாயங்களின் பலாபலன்கள், சிறப்புகள் குறித்து விவாதிப்பதில் அர்த்தமில்லை. பல முனைகளிலிருந்து எதிர்ப்பை ஊக்குவிப்பது அதிகளவு யதார்த்தபூர்வமானது, பொது பல சேனாவின் நலன்களுடன் மோதுதல் அல்லது அடிப்படை விழுமியங்களுடன் மோதுதல் என்ற அடிப்படையில் அது அமையலாம்.
முற்றுமுழுதாக விழுமியங்கள் அல்லது கொள்கைகளை அடிப்படையாக கொண்ட எதிர்ப்பு என்பது அவசியமானது. பாராட்டத்தக்கது, ஆனால் ஆழம் அகலத்தில் போததாக விளங்கும். நலனை அடிப்படையாக கொண்ட தந்திரோபாயம் வெற்றியடைவதற்கு வாய்ப்பு அதிகம். தலைவருக்கும் தானும் தலைவராக கருதப்பட வேண்டுமென விரும்புபவருக்குமிடையில் எப்போதும் முரண்பாடு உருவாவதுண்டு.
ஞானசாரரின் உரை மற்றும் அளுத்கம வன்முறைகளுக்குப் பிறகு ஆட்சியாளர்களுக்கும் பொதுபல சேனாவிற்கும் இடையில் நலன்கள் தொடர்பான தெளிவான முரண்பாடு உருவாகி உள்ளது. பொதுபல சேனா அரசை யார் இயக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. அரச சாதனங்கள் யாருக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பிசாசின் உறவுகளுடன் கூட இணைய தான் தயார் என்றார் லியோன் டிரொட்ஸ்கி, தற்போதைய சூழ்நிலைக்கு, ஆழும் மகிந்த அரசு உட்பட சலக அரசியல் கட்சிகளும் காரணம். பிரச்சனைக்கு காரணமானவர்களே தீர்வுக்கும் காரணமாக வேண்டும். பொதுபலசேனாவை சாத்தியமாக்கியவர்கள் என்ற வகையில் அந்த அமைப்பை எதிர்க்கும் உடனடி திறன் பலம் ராஜபக்சாக்களுக்கே உள்ளது. இதனை புறக்கணிக்கவும் முடியாது.
ஆனால் யதார்த்தபூர்வமான தந்திரோபாயம் என்பது ஜே.வி.பியை தலைமைத்துவமாகவும் முக்கியமானதாகவும் கொண்ட பரந்து பட்ட இடது சாரரி கூட்டணி. பாசிசத்தை எதிர்கொள்வதற்கான பல வழிகளிலான தந்தி ரொபாயங்களில் இதுவும் ஒன்று.
இராணுவத்தினர், அதிகார வர்க்கம், நீதித்துறை, வர்த்தகத் துறை, மாணவர்கள், தொழிற்சங்கள், ஊடவியலாளர்கள், வெளிநாடுகள் என அனைவருக்கும் பொதுபல சேனாவின் திட்டங்கள் அவர்களின் நலனுக்கு எவ்வளவு குந்தகம் விளைவிக்கக்கூடியது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதனை எதிர்த்து தோற்கடிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும்.

Post a Comment