சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் இனி அப்பிரதேசத்தை நிரந்தரமாக மறந்து விட வேண்டியதுதான் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை அளவிடும் டிஜிட்டல் மீட்டர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பூர் பகுதியில் திட்டமிட்டபடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தடையின்றி பெற்றுத் தருவதற்கும் இவ்வாறான செயற்திட்டங்கள் அவசியமானது.
இதன் காரணமாக அப்பகுதியில் குடியிருந்த சிலர் இடம்பெயர நேர்ந்துள்ளது உண்மைதான். எனினும் அவர்கள் மாற்று இடங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் சம்பூர் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது. நாட்டின் அபிவிருத்திக்காக இது போன்ற விட்டுக் கொடுப்புகள் அவசியம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Post a Comment