இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் சமீபத்திய வன்முறைகள் தமக்கு கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையை பேணமுடியாது என இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவே இலங்கை அரசைக் கோருகிறோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
Post a Comment