அளுத்கம சம்பவம் கடும்போக்குவாதிகளினால் தூண்டப்பட்ட நெருப்பாகும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
மதவாத இனவாத முரண்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இனவாத முரண்பாடுகளை களைந்து மக்களின் நலன் மற்றும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்த புத்திஜீவிகள் மதத் தலைவர்கள் அணி திரள வேண்டும்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறகைளில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடும்போக்குவாதிகளினால் தூண்டப்பட்ட நெருப்பாகும் இதனை தற்போது அவர்களினாலேயே அணைக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினையை தூண்டுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு காணப்படுகின்றமை பொலிஸார் அறிந்ததொன்றே.ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் சம்பவத்தின் பின்னணியில் இயங்குகின்றனர் இதுவே பாதுகாப்புப் படையினருக்கு தடையாக அமைந்துள்ளது.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மற்றும் வர்த்தக நோக்கில் உருவாக்கிய முரண்பாடுகளினால் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment