அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்காவைவிட இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் எட்டு மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவருவதும், வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு பெருகிவருவதும் இந்த ஆய்வின் சுவாரசிய அம்சங்களாகும்.
குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் வேலைவாய்ப்பு நிலவரம் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் அந்த ஆய்வு பட்டியலிட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கு முதலீடு செய்வீர்! சர்வதேச வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து. ஜெனிவாவிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சுவாரசியமான புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் தொகுப்பு: 2000மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் வேலைவாய்பப்பு பெருக்கத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்த நாடுகளில், 2007ம் ஆண்டு முதல், வேலைவாய்ப்பில், வருடந்தோறும் 1 சதவீதம் வளர்ச்சி இருந்து வருகிறது. குட்டிநாடான செனேகல், 1991ம் ஆண்டு 12 சதவீத ஊதியம் பெரும் தொழிலாளர்களை கொண்டிருந்தது. 2013ம் ஆண்டு இது 26 சதவீதமாக அதிகரித்தது. வறுமை குறைகிறது இதன் காரணமாக அந்த நாட்டில் இதே காலகட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வறுமை 34 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 0.5 விழுக்காடு அதிகரித்தபடி உள்ளது. இதே காலகட்டத்தில் பெரு நாடு, தொழிலாளர் எண்ணிக்கையை 34 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தியது. எனவே இக்காலகட்டத்தில் நாட்டின் உற்பத்தி 1.8 சதவீதம் அதிகரித்தஉள்ளது. ஏழைகள் எண்ணிக்கை 23 சதவீதம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதால் வறுமை ஒழிப்பு சாத்தியப்பட்டதற்கு அந்த நாடு ஒரு உதாரணம். வேலையில்லாத திண்டாட்டம் 6மூ 2013ம் ஆண்டு உலக அளவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 20 கோடியாக இருந்தது.
இதே நிலை நீடித்தால் 2019ம் ஆண்டுக்குள், வேலையில்லாதோர் எண்ணிக்கை, 22 கோடியை தாண்டிவிடும். உலக அளவில் 2017ம் ஆண்டுவரையில் வேலையாய்ப்பு கிடைப்பதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாது என்று கருதப்படுகிறது.
உலக அளவில் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக அளவு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. உலகம் முழுவதிற்குமான வேலையில்லா திண்டாட்டத்தின் சராசரி 6 சதவீதமாக உள்ள நிலையில், மேற்கூறிய நாடுகளில் இது இரு மடங்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்பு அடுத்த ஐந்தாண்டுகளில் வளரும் நாடுகளில்தான் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. இதனால் வளரும் நாடுகளுக்கு பிற நாடுகளில் இருந்து வேலைதேடி வருவோர் எண்ணிக்கை கூடும். உலகம் தழுவிய அளவில் 231.5 மில்லியன் மக்கள், தாங்கள் பிறந்த தேசத்தை விட்டு அன்னிய தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் பாதிபேர் ஐரோப்பிய நாடுகளிலும், பிற வளர்ந்த நாடுகளிலும் வசிக்கிறார்கள். இந்தியா எப்படி? அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம், 8.5 சதவீதமாக இருக்கும். அதே நேரம் வளர்ந்த நாடான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளில் இது 1.6 சதவீதமாக இருக்கப்போகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் 9.5 சதவீதமாக இருக்கப்போகிறது. சவுதி, சிங்கப்பூர்.. அதேநேரம் எண்ணை வளம் மிக்க குவைத், சவுதி போன்ற நாடுகளை உள்ளடக்கிய மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு அடுத்த ஐந்தாண்டுகளில் வெறும் 2 சதவீதம்தான் அதிகரிக்கப்போகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்றவற்றில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்க உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Post a Comment