“விசாரணைக் குழுவுக்கு ஆலாசனையையும் உதவியையும் வழக்குவதற்கு மூத்த நிபுணர்களின் சிறிய குழுவொன்றையும் நியமிக்க நவநீதம்பிள்ளை முடிவு செய்துள்ளார். எவ்வாறாயினும், இது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணையே.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா குறித்த விசாரணைக்குழுவின் முதலாவது கூட்டம் வரும் ஜுலை மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேட் கொல்வில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில்-
இது சுதந்திரமான நிபுணர் குழுவின் விசாரணையல்ல. நிபுணர்கள் இதற்குத் தலைமை தாங்கமாட்டார்கள். இவர்கள், மேலதிகமான நிபுணத்துவ வழிகாட்டலை வழங்குவதுடன். விசாரணைச் செயல்முறைகளில் இணைந்திருப்பர்.
விசாரணைகளை சுதந்திரமான முறையில் பகுப்பாய்வு செய்வர். சிறிலங்கா ஊடகங்களில் வெளியாகின்ற ஊகங்களுக்கு மாறாக, இந்த விடயத்தில் உதவச் சாத்தியமுள்ள – ஆர்வம் கொண்டுள்ள மூத்த நிபுணர்கள், சிலருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் எவரும் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவில்லை. நிபுணர்களின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டதும் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவிப்பார். சிறிலங்கா விசாரணைக் குழு ஜூலை மாதம் ஜெனிவாவில் முதலாவது கூட்டத்தை நடத்தும். நவநீதம்பிள்ளையால் தெரிவு செய்யப்பட்ட நிபுணர்களும் இதில் பங்கேற்பர்.
இந்த விசாரணைக்குழு 12 பேரைக் கொண்டதாக இருக்கும். இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ், ஐ.நாவில் மனிதஉரிமைகள் குறித்த விசாரணைகளில் 20 ஆண்டு காலம் பணியாற்றிய, அனுபவம்மிக்க மூத்த உறுப்பினர்.
இந்த விசாரணைக்குழுவுக்கு 2014ம் ஆண்டு செலவுகளுக்காக 1.192,000 டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. நியுயோர்க்கில் கடந்த 3ம் நாள் நடந்த நிர்வாக மற்றும் வரவுசெலவுத் திட்டத்துக்கான ஐ.நா ஆலோசனைக் குழுவில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
வழக்கமான நடைமுறைகளின்படி, இந்த விசாரணை தொடர்பான வாய்மூல மஙற்றும் விரிவான அறிக்கைகள் சமரப்பிக்கப்பட முன்னதாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்தை வெளிப்படுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வாய்ப்பை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment